தொகுதிக்கு செய்தது என்ன? வேட்பாளர் அண்ணாதுரை விளக்கம்

தொகுதிக்கு செய்தது என்ன? வேட்பாளர் அண்ணாதுரை விளக்கம்

கடந்த 5 வருடங்களில் திருவண்ணாமலை தொகுதிக்கு செய்தது என்ன என்பது குறித்து திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார். 

தொகுதிக்கு செய்தது என்ன? வேட்பாளர் அண்ணாதுரை விளக்கம்

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக 3வது முறையாக சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார். முதல் தடவை அதிமுகவைச் சேர்ந்த வனரோஜாவிடம் தோல்வி அடைந்த அண்ணாதுரை, 2வது முறை அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை வென்று எம்.பியானார். தற்போது 3வது முறையாக இத் தொகுதியில் போட்டியிடுகிறார். 

51 வயதாகும் சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். 1987ல் இளைஞரணி உறுப்பினராக திமுகவில் இணைத்துக் கொண்டார். 2002ல் கிளைக் கழக செயலாளர், 2006ல் துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு துணைத் தலைவர், 2012ல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். மனைவி கே.பி.தீபா, பல் டாக்டராவார். இவர்களுக்கு உதயா, பிரஜித் என 2 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் திருவண்ணாமலை தொகுதிக்கு செய்தது என்ன என்பது குறித்து திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை கூறியிருக்கிறார். 

திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

முன்னதாக திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை பேசியதாவது, 

கடந்த 5 ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் எம்.பியாக பணியாற்றினேன். நாடாளுமன்றத்தில் 507 கேள்விகளை எழுப்பி, தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை பெற்றுள்ளேன்.

இந்த தொகுதியின் வளர்ச்சிக்காகவும் பேசி இருக்கிறேன். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. ஆனாலும் மாற்றுத்திறனாளிகக்கான நலத்திட்டங்கள் போன்றவற்றை ஒன்றிய அரசு அதிகாரிகளின் துணையோடு என்னால் செய்ய முடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன்.

ஒரு ஆளுங்கட்சி எம்.பி.யால் செய்ய இயலாத பணிகளையும், எதிர்கட்சி எம்பியாக இருந்து செய்திருக்கிறேன். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்த முறை என்னை வெற்றி பெற வைத்தால் சிறப்பான எம்.பியாக பணியாற்றுவேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

--------------------------------------


Next Post Previous Post

No comments