கலெக்டர் விளையாடிய கிரிக்கெட்-வீரர்கள் திகைப்பு

கலெக்டர் விளையாடிய கிரிக்கெட்-வீரர்கள் திகைப்பு

காரணம் இதுதான் 

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி தேர்தல் விழிப்புணர்வை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஏற்படுத்தினார். 

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று (31.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். 

அப்போது அந்த பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் டென்னிஷ் பந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எனக்கு பந்து போடுங்கப்பா, என கேட்டு பேட்டிங் செய்தார். முதலில் இடது கையில் பேட்டிங் செய்தார். 

அப்போது போட்பபட்ட பந்துக்களை நேர்த்தியாக அடித்தார். அதன்பிறகு வலது கையில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தார். இடது கை பேட்ஸ்மேன், வலது கையில் எப்படி பேட்டிங் செய்ய போகிறார் என நினைத்து  இளைஞர்கள் அவருக்கு மெதுவாக பந்தை போட்டனர். இதைப்பார்த்த கலெக்டர் வேகமாக போடுங்கப்பா என்றார். இதையடுத்து வேகமாக வந்த பந்துக்களை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விளாசி கைதட்டலை பெற்றார். 

கலெக்டர் விளையாடிய கிரிக்கெட்-வீரர்கள் திகைப்பு

இடது, வலது என கலெக்டர் இரு புறங்களிலும் பேட்டிங் செய்ததை பார்த்து வீரர்கள் திகைத்தனர். 

பிறகு கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை அழைத்து 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கினார். 

தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு வாக்காளர்  விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஆரணி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான மு. பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, அரசு அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

வீடியோ...