வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் யார்?யார்?
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 49 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் ஏப்ரல் 19ந் தேதி நடக்கிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ந் தேதி எண்ணப்படுகிறது.
தமிழ்நாட்டில் இத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20ந் தேதி தொடங்கி இன்று (27ந் தேதி) நிறைவடைந்தது.
![]() |
மனு தாக்கல் செய்யும் முன்னாள் ராணுவ வீரர் சேட்டு |
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 20ந் தேதி முதல் 27ந் தேதி வரை 26 சுயேச்சைகள் உள்பட 49 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கின்றனர்.
அவர்கள் பெயர் வருமாறு,
1)கே.செல்வம் - வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
2)எஸ்.விஜயகுமார் - சுயேட்சை
3)பி.எஸ்.உதயகுமார் - சுயேட்சை
4)எம்.கலியபெருமாள் - அதிமுக
5)எம்.கலியபெருமாள் - அதிமுக
6)எம்.கலியபெருமாள் - அதிமுக
7)எம்.கலியபெருமாள் - அதிமுக
8)கே.இந்துமதி - அதிமுக
9)சி.என்.அண்ணாதுரை - திமுக
10)சி.என்.அண்ணாதுரை- திமுக
11)ஆர்.ரமேஷ்பாபு - நாம் தமிழர் கட்சி
12)பாண்டியன் - நாம் தமிழர் கட்சி
13)வி.கோதண்டபாணி - மக்கள் புரட்சி கழகம்
14)ஏ.பூங்கொடி - சுயேச்சை
15)எம்.செந்தமிழ் செல்வன் - சுயேட்சை
16)எஸ்.சங்கர் - சுயேச்சை
17)எஸ்.கலாஸ்திரி - அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி
18)தீபம்மாள் சுந்தரி - சுயேட்சை
19)சி.சத்தியமூர்த்தி - மக்கள் நல கழகம்
20)ஜெகநாதன் - சுயேச்சை
21)எம்.நல்லசிவம் - சுயேச்சை
22)பி.தங்கராஜ் - சுயேட்சை
23)ஆர்.ரமேஷ்பாபு - நாம் தமிழர் கட்சி
24)புகழேந்தி - திமுக
25)வி.எம்.மோகன் ராஜா - பகுஜன் சமாஜ் பார்ட்டி
26)தி.சிவகுருராஜ் - சுயேச்சை
27)ஆர்.சதீஷ்குமார் - சுயேச்சை
28)கே.ஏழுமலை- சுயேச்சை
29)எஸ்.சந்தியா - சுயேச்சை
30)ஏ.அஸ்வத்தாமன் - பாரதிய ஜனதா கட்சி
31)எம்.சேட்டு - சுயேட்சை
32)எஸ்.அண்ணாதுரை - சுயேட்சை
33)ஏ.நக்கீரன் - சுயேச்சை
34)சி.என்.அண்ணாதுரை - திமுக
35)சி.என்.அண்ணாதுரை - திமுக
36)பழனி - பொது கட்சி
37)கௌதம் - சுயேட்சை
38)கலியபெருமாள் - சுயேச்சை
39)எஸ்.அண்ணாதுரை - சுயேச்சை
40)ஏ.அண்ணாதுரை - சுயேச்சை
41)சி.ஜெ.பென்னி ராஜன் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி
42)அக்னி செல்வரசு - நாடாளும் மக்கள் கட்சி
43)ஜி.சுரேஷ் - சுயேச்சை
44)ஏ.பாண்டியன் - சுயேச்சை
45)வி.விமல் - சுயேட்சை
46)ஏ.கலியபெருமாள் - சுயேச்சை
47)சி.ஏழுமலை - பாரதிய ஜனதா கட்சி
48)ஜி.செல்வம் - சுயேட்சை
49)டி.பி.ரமேஷ் - சுயேட்சை
![]() |
நாம் தமிழர் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் பென்னிராஜன் மனு தாக்கல் |
திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார். அண்ணாதுரை என்ற பெயரில் 3 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார். கலியபெருமாள் என்ற பெயரில் 2 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
வேட்பு மனு பரிசீலனை நாளை நடக்கிறது. இதில் விதிமுறைப்படி தாக்கல் செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். 30ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன்பிறகே இறுதி வேட்பாளர் பட்டியல் சுயேச்சை சின்னங்களுடன் வெளியிடப்படும்.
---------------------------------------
Social Plugin