திருவண்ணாமலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்
முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் போட்டி
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளாராக முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை உண்ணாமலை திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.கண்ணதாசன், மாவட்ட தலைவர் சாமி ஆகியோர் முன்னிலை வகிக்க நகர செயலாளர் பா.பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் இர.ரமேஷ்பாபு அறிமுகப்படுத்தப்பட்டார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முகமது, மாவட்ட பொருப்பாளர் ஜமீன், நிர்வாகிகள் கோ.பிரபு உள்பட திருவண்ணாமலை செங்கம் கீழ்பென்னாத்தூர் கலசபாக்கம் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்களும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் தேர்தல் கள பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் தொகுதி பொறுப்பாளர் அருண் நன்றி கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரமேஷ்பாபு, எங்களுக்கு சின்னம் ஒரு பொருட்டில்லை. எந்த சின்னம் கொடுத்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். நான் வெற்றி பெற்றால் தொழிற்சாலைகள் கொண்டுவருவதோடு செங்கம் பகுதியில் வாசனை திரவியம் (சென்ட் தொழிற்சாலை) கொண்டு வருவேன் என்றார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரமேஷ்பாபு, முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணராவார். 45 வயதாகும் அவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
-------------------------------------