டிரைவிங் லைசன்ஸ்சை இனி நேரில் பெற முடியாது

டிரைவிங் லைசன்ஸ்சை இனி நேரில் பெற முடியாது

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் 

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் இனி விரைவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

டிரைவிங் லைசன்ஸ்சை இனி நேரில் பெற முடியாது

இது சம்மந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனம் தொடர்பாகவும், ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் 28.02.2024 முதல் விரைவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கும் முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக வழங்கக் கூடாது என சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

தவறான முகவரி மற்றும் அலைபேசி எண்கள் வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் இருப்பின் அதற்கு விண்ணப்பதாரரே பொறுப்பு ஆவார். விண்ணப்பதாரர்களின் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் தவறுதலாக இருப்பின் அதனை சரி செய்ய சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து சரி செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிரைவிங் லைசன்ஸ்சை இனி நேரில் பெற முடியாது

விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் ஆவணங்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் துறை மூலம் வழங்கப்படாமல் திரும்ப வரப் பெற்றால் விண்ணப்பதாரர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவரிடம் நேரடியாக ஒப்படைக்கக் கூடாது எனவும், உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை பெற்றுக் கொண்டு அதன் மூலமாகவே அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமும் மாலை 4 மணி வரை பிரிண்ட் செய்யப்படும் ஆவணங்களை அன்றைய தினமே அனுப்பி வைக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

------------------------------------


Next Post Previous Post

No comments