ரூ.100 கோடியை ஏமாற்றியதாக நகைக்கடை அதிபர் மீது புகார்

ரூ.100 கோடியை ஏமாற்றியதாக நகைக்கடை அதிபர் மீது புகார்

தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த நகைக்கடை அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ரூ.100 கோடியை ஏமாற்றியதாக நகைக்கடை அதிபர் மீது புகார்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து மனு அளித்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, 

தண்டராம்பட்டில் விஜயராஜ் என்பவருக்கு ஸ்ரீ விஜய் ஜூவல்லர்ஸ் மற்றும் அடகு கடையும், ராதாபுரத்தில் கிரின் மெண்வுட் ஆங்கில பள்ளியும் உள்ளது. நகை கடையில் இவர் தங்க தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் தொடங்கி கிராமப்புறங்களை சேர்ந்த உழைக்கும் மக்களை குறிவைத்து முகவர்கள் மூலமாக இத்திட்டத்தில் சேர்த்தார். ஒவ்வொரு ஆண்டும் பொஙகல் மற்றும் தீபாவளி தங்க சிறுசேமிப்பு திட்டம் நடத்தி கிராமப்புற மக்களுக்கு சில சிறப்பு பரிசுகளையும் வழங்கியுள்ளார். 

கடந்த 2023ம் ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் தங்க சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி என தன்னுடைய கலெக்ஷன் முகவர் மூலமாக பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பல ஆயிரம் மக்களை சேர்த்து திட்டங்களுக்கு ஏற்றாற்போல் மாத தவணைகள் வசூலித்துள்ளார்.

ரூ.100 கோடியை ஏமாற்றியதாக நகைக்கடை அதிபர் மீது புகார்

ரூ.100 கோடியை ஏமாற்றியதாக நகைக்கடை அதிபர் மீது புகார்

இவ்வாறு ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்படவில்லை. சிறுசேமிப்புக்கான தங்கத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஸ்ரீ விஜய் ஜூவல்லர்ஸ் மற்றும் அடகு கடையும் யாரோ ஒருவருக்கு விஜயராஜ் விற்பனை செய்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. 

எனவே ஏழை, எளிய மக்களிடமிருந்து சிறுசேமிப்பு தொகையை வசூலித்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ள ஸ்ரீ விஜய் ஜூவல்லர்ஸ் மற்றும் அடகு கடை உரிமையாளர் விஜயராஜ் மீது ஏமாற்றுதல் மற்றும் மோடிக்கான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பணத்தை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். 

ரூ.100 கோடியை ஏமாற்றியதாக நகைக்கடை அதிபர் மீது புகார்

அவர்களுடன் தமிழ்நாடு தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா,மாநில இணை செயலாளர் கதிர்காமன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். 

தனி நபர்களிடம் சீட்டு கட்டினால் பணத்திற்கு உத்திரவாதம் இல்லாமல் போய் விடும், நகைக்கடைகளில் கட்டினாலாவது தங்கம் கிடைக்கும் என்று நம்பி பணம் கட்டியவர்கள் ஏமாற்றப்பட்டது தண்டராம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments