திருவண்ணாமலையில் சிவராத்திரி விழா- 10 கிலோ சலங்கையை கால்களில் கட்டி ஆவேச...


சிவராத்திரியை முன்னிட்டு ஈசான்ய மைதானத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை கயிலாய வாத்தியம், வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், விவாத மேடை, பக்தி இசை, நாட்டிய நாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய, விடிய நடைபெற்றன.

இதில் பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டமும், பெருஞ்சலங்கையாட்டமும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் 110 கலைஞர்கள் பங்கேற்றனர். பெருஞ்சலங்கையாட்டத்தில் ஒவ்வொருவரும் 10 கிலோ கொண்ட சலங்கைகளை காலில் கட்டி நடனம் ஆடி காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.
Next Post Previous Post

No comments