திருவண்ணாமலை மாவட்டத்தில் தானியங்கி வானிலை நிலையம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானியங்கி வானிலை நிலையம்

அரசு ஒப்புதல்-கலெக்டர் தகவல் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானியங்கி மழைமானி மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானியங்கி வானிலை நிலையம்

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழையளவை துல்லியமாக கண்காணிக்க 1400 தானியங்கி மழைமானிகளும், 100 தானியங்கி வானிலை நிலையங்களும் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 59 தானியங்கி மழைமானிகள் (Automatic Rain Gauges) மற்றும் 3 தானியங்கி வானிலை நிலையங்கள் (Automatic Weather Stations)  கீழ்கண்ட விவரப்படி அமைக்கப்படவுள்ளது.

வெம்பாக்கம் வட்டம்- ஏஆர்ஜி (தானியங்கி மழைமானி) -03. ஏடபுள்யூஎஸ்(தானியங்கி வானிலை நிலையம்) -0

செய்யார் வட்டம்- ஏஆர்ஜி- 05, ஏடபுள்யூஎஸ்- 01, 

சேத்துப்பட்டு வட்டம்- ஏஆர்ஜி- 03, ஏடபுள்யூஎஸ்- 0.

ஆரணி வட்டம்- ஏஆர்ஜி- 04. ஏடபுள்யூஎஸ்- 01, 

போளுர் வட்டம்- ஏஆர்ஜி- 05. ஏடபுள்யூஎஸ்- 0, 

வந்தவாசி வட்டம்- ஏஆர்ஜி- 07. ஏடபுள்யூஎஸ்- 0, 

கலசபாக்கம் வட்டம்- ஏஆர்ஜி- 04, ஏடபுள்யூஎஸ்- 0.

ஜமுனாமரத்தூர் வட்டம்- ஏஆர்ஜி- 04, ஏடபுள்யூஎஸ்- 0.

செங்கம் வட்டம்- ஏஆர்ஜி- 10. ஏடபுள்யூஎஸ்- 0.

தண்டராம்பட்டு வட்டம்- ஏஆர்ஜி- 07. ஏடபுள்யூஎஸ்- 01.

கீழ்பென்னாத்தூர் வட்டம்- ஏஆர்ஜி- 03. ஏடபுள்யூஎஸ்- 0.

திருவண்ணாமலை வட்டம்- ஏஆர்ஜி- 04. ஏடபுள்யூஎஸ்- 0. 

 

 

இதன்படி முதற்கட்டமாக வெம்பாக்கம் வட்டத்தில் 2 இடங்களிலும், செய்யார் வட்டத்தில் 2 இடங்களிலும், சேத்துப்பட்டு வட்டத்தில் 1 இடத்திலும் தானியங்கி மழைமானிகள் அமைக்க முதற்கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி (Civil Work) துவக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மழைமானி அமையவுள்ள இடங்களில் கம்பி வேலி (Fencing) அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளது. 

மேற்படி பணிகளை மேற்பார்வை செய்திட மாவட்ட செயலாக்க குழுவில் (District Implementation Committee)  உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேற்படி பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 --------------------------------------


Next Post Previous Post

No comments