த.வேணுகோபால் மறைவு-திமுக நிகழ்ச்சிகள் ரத்து

த.வேணுகோபால் மறைவு-திமுக நிகழ்ச்சிகள் ரத்து

அரைக்கம்பத்தில் கொடிகள்-எ.வ.வேலு அறிக்கை 

முன்னாள் எம்பி த.வேணுகோபால் மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

த.வேணுகோபால் மறைவு-திமுக நிகழ்ச்சிகள் ரத்து

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியைச் சேர்ந்தவர் த.வேணுகோபால் (வயது 88) மொழிப்போர் தியாகி. 

40 ஆண்டுகளாக மாவட்ட திமுக அவை தலைவராக இருந்து வந்தார். 1972ல் ஒன்றிய குழு தலைவராகவும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று எம்பி ஆனார். அதே போல் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1986 ஆம் ஆண்டு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் 45 நாட்கள் சிறையில் இருந்தார்.

த.வேணுகோபால் உடல் நலமின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அண்ணாதுரை எம்பி, இரா.ஸ்ரீதரன், எஸ்.பன்னீர்செல்வம், டாக்டர் கம்பன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

த.வேணுகோபால் மறைவு-திமுக நிகழ்ச்சிகள் ரத்து

த. வேணுகோபால் மறைவு சம்மந்தமாக அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவரும், நாடாளுமன்ற- சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், கழக முப்பெரும் விழாவில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தந்தை பெரியார் விருது பெற்றவருமான கழகத்தின் மூத்த முன்னோடிமான த.வேணுகோபால் உடல் நலம் குன்றியும், முதுமையின் காரணமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

அவரது மறைவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் அனைத்து கழக நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் செய்யப்படுகிறது. கழக கொடிக்கம்பங்களில் கொடியினை அரை கம்பத்தில் பறக்க விட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments