திருவண்ணாமலை பவுர்ணமி- சிறப்பு பஸ்கள் விவரம்

திருவண்ணாமலை பவுர்ணமி- சிறப்பு பஸ்கள் விவரம் 

2408 பஸ்கள் இயக்கம்-கிளாம்பாக்கத்திலிருந்து 650 பஸ்கள்

மாசி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2408 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து மட்டும் 650 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை பவுர்ணமி- சிறப்பு பஸ்கள் விவரம்

மாசி மாத பௌர்ணமி 23.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 04.54 மணிக்கு தொடங்கி 24.02.2024 (சனிக்கிழமை) அன்று மாலை 06.51 மணிக்கு முடிவடைகிறது.

2 நாட்களும் திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்  மற்றும்  அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 

இது சம்மந்தமாக விழப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை பவுர்ணமி- சிறப்பு பஸ்கள் விவரம்

திருவண்ணாமலைக்கு, விழுப்புரம் மற்றும் சகோதர போக்குவரத்துக் கழகங்கள் மூலம்  23.02.2024 அன்று 1294 பேருந்துகளும், 24.02.2024 அன்று 1114 பேருந்துகளும் சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களுர், வேலூர், திருச்சி, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி  ஆகிய பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

குறிப்பாக கிளாம்பாக்கத்திலிருந்து 23.02.2024 அன்று 400 பேருந்துகளும் 24.02.2024 அன்று 250 பேருந்துகளும், பெங்களுரிலிருந்து 23.02.2024 அன்று 127 பேருந்துகளும், 24.02.2024 அன்று 120 பேருந்துகளும், வேலூரிலிருந்து 23.02.2024 மற்றும் 24.02.2024 ஆகிய இரு நாட்களும் தலா 193 பேருந்துகளும் மற்றும் இதர இடங்களிலிருந்து முதல் நாள் 574 பேருந்துகளும், இரண்டாம் நாள் 500 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

இவ்வாறு மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

---------------------------------------


Next Post Previous Post

No comments