திருவண்ணாமலை: வீடு, கடைகள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை: வீடு, கடைகள் இடித்து தரைமட்டம்

பிரபல மருத்துவமனையும் இடிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை நகரில் சாலை விரிவாக்க பணிக்காக கடை, வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பிரபல மருத்துவமனையும் தப்பவில்லை. 

திருவண்ணாமலை: வீடு, கடைகள் இடித்து தரைமட்டம்

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு மணலூர்பேட்டை சாலையில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை, வீடுகள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து திருக்கோயிலூர் ரோடு, வேட்டவலம் ரோடு, போளூர் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 

திருக்கோயிலூர் ரோட்டில் இப்பணி நிறைவடைந்த நிலையில் அருணை கல்லூரி அருகில் உள்ள ஏரி மீதுள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

திருக்கோயிலூர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஒரு பகுதியில் குறிப்பிட்ட சில வீடுகள் அகற்றும் பணி நிலுவையில் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை: வீடு, கடைகள் இடித்து தரைமட்டம்

இந்நிலையில் தண்டராம்பட்டு ரோட்டில் சில நாட்களாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எப்போதும் இல்லாத அளவு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இதே போல் சில கடைகள் முழுவதுமாகவும், சில கடைகள் பாதி அளவிற்கும் இடிக்கப்பட்டது. தேனிமலையில் இதே போல் கடை, வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. 

காலம் காலமாக இருந்த வந்த வீடுகள் தங்கள் கண் முன்னே இடித்து தள்ளப்பட்டதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டனர். பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

திருவண்ணாமலை: வீடு, கடைகள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை: வீடு, கடைகள் இடித்து தரைமட்டம்

சோமாவாரகுளத் தெருவிலும் பிரபல கண் மருத்துவமனையின் முன் பகுதி இடிக்கப்பட்டது. மேலும் அந்த வரிசையில் இருந்த கடை ஒன்று முழுவதுமாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. 

4 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்றால் இந்த மாதியான நடவடிக்கைகள் எடுத்துதான் ஆக வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். சாலை அகலப்படுத்தும் பணிக்கு வரவேற்பு இருந்தாலும், பாராளுமன்ற தேர்தல் வருகின்ற நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது திமுகவினர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.  

Next Post Previous Post

No comments