சித்தா, கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சித்தா, கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

மருத்து வழங்குபவர் பணியிடமும் நிரப்பப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 2 அரசு சித்த மருத்துவர், 4 மருந்து வழங்குபவர் பணியிடம் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 6 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. 

இது குறித்து சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கவுர செயலாளர் மற்றும் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் சித்தா நலப்பணிகள் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம் 

சித்த மருத்துவ அலுவலர்- நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்-2, சம்பளம்-ரூ.34000

கல்வி தகுதி- சித்தாவில் பிஎஸ்எம்எஸ்,எம்.டி படிப்பு முடித்திருக்க வேண்டும்  

(BSMS/MD (Siddha) Registration in respective board/ Council of State such as Tamilnadu Board of Indian medicine/TSMC/TNHMC)

மருந்து வழங்குபவர் - நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்-4, சம்பளம்- தினமும் ரூ.750

கல்வி தகுதி- இந்திய மருத்துவமுறையில் டிப்ளமோ (அல்லது) சித்தாவில் மருந்தகத்தில் டிப்ளமோ (அல்லது) டிப்ளமோ இன் இன்டர்கிரேட்டட் பார்மசி (டிஐபி) 

(1.Diplomo in Indian System of Medicine (or) 2. Diplomo in Pharmacy in Siddha (or) 3. Diplomo in Intergrated Pharmacy (DIP) conduted by the Government of TamilNadu)

அரசு சித்த மருத்துவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

1. கல்வித் தகுதி சான்று. 2. கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்று.

3. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 20.02.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கால்நடை மருத்துவ ஆலோசகர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது 

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், மூலம் கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திடவும், மேலும் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

சித்தா, கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை ஆவின் ஒன்றியத்தின் மூலம், பால் உற்பத்தியாளர்களின் மனையடியிலேயே கால்நடை மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை, செயற்கை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒன்றியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 9-கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது காலியாக உள்ள 6-கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

எனவே தற்காலிகமாக பணிபுரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்கள் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகின்ற 16ந்தேதி காலை 11 மணிக்கு திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, ஆவின் தலைமை அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், வேலூர் மெயின்ரோடு, வேங்கிக்கால், திருவண்ணாமலை - 606604 என்ற இடத்தில், நேரடியாக நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். 

மேலும் விவரங்கள் அறிய email- gmaavintvmalai@gmail.com  மற்றும் 8838482278 என்ற தொலைபேசி எண் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்கு மாதம் ரூ.39 ஆயிரம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Post Previous Post

No comments