100 கம்பெனிகள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

100 கம்பெனிகள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல்-திருவண்ணாமலையில் 140 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

15ந் தேதி கல்வி கடன் பெற சிறப்பு முகாம்  

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 17ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், 15ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் பெற சிறப்பு முகாமும் நடக்க உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

100 கம்பெனிகள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இது குறித்து கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது,

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 17.02.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வினை நடத்துகின்றன. 

இங்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் நடைபெறவுள்ளது. ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதற்கான கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப்பட்டபடிப்பு என அனைவரும் கலந்து கொள்ளலாம். 

100 கம்பெனிகள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பதிவு செய்தோ, புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் நேரில் கலந்துகொள்ளலாம். 

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை குறித்து அறிந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையம், தொலைபேசி எண் 04175233381 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

சிறப்பு கல்வி கடன் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (GDP HALL) 15.02.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in  என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து கடன் ஆணை வழங்கப்படும்.

100 கம்பெனிகள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி Joint account  பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று, பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள். முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

பங்குபெறும் கம்பெனிகள்  

17ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களில் சில...

சென்னை ராயல் என்ஃபீல்டு அகாடமி, நாமக்கல் எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், சேலம் கோ டிஜிட்டல் விளம்பர நிறுவனம், கோவை ஏரோவிஷன் நிறுவனம், காஞ்சிபுரம் ஸ்ரீ ஜம்பு மகரிஷி கோவிந்தம்மாள் அறக்கட்டளை, சென்னை பாரதி ஏர்டெல் லிமிடெட், சென்னை முத்தூட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், திருவள்ளூர் டிரான்ஸ் இண்டியா கார்ப்பரேட் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் கோசி மிண்டா அலுமினியம் கம்பெனி லிமிடெட், சென்னை ஐஐஎப்எம் நிறுவனம், சென்னை பிட் பார்மேஷன் பிரைவேட் லிமிடெட், திருச்சி ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் லிமிடெட், காஞ்சிபுரம் கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட், ஹைதராபாத் சிஎஸ்கே எண்டர்பிரைசஸ், சென்னை டிவிஎஸ் ஸ்டாபிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், வேலூர கணேஷ் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்பட 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் 

திருவண்ணாமலையில் வேலை

எச்டிபி பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட், கோ டிஜிட்டல் ஆட்ஸ், முத்தூட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட், பிஎஸ்எஸ் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட், அல்கோ டெக்னோசாப்ட், கணேஷ் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பை அறிவித்துள்ளன.

---------------------------------------


Next Post Previous Post

No comments