திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

 திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

26 அடி உயர தேரை முதுகில் அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்

திருவண்ணாமலை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் 26 அடி உயர தேரை முதுகில் அலகு குத்தி பக்தர்கள் இழுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.


திருவண்ணாமலை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச விழா விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச பால் காவடி திருவிழா 99 வது வருடமாக நடைபெற்றது.

இதையொட்டி பழனியாண்டவருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சக்திவேல் ஊர்வலம் நடைபெற்றது. பிறகு பக்தர்கள் தரையில் படுக்க அவர்கள் மீது 2 ஆள் தூக்க கூடிய சக்தி வேல் வைத்து எடுக்கப்பட்டது. 

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

அதன்பிறகு கொதிக்கும் எண்ணெய்யில் உள்ள வடையை பக்தர்கள் கைகளால் எடுத்தனர். 

தமிழ்வாணன் என்ற பக்தரின் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்து பொடியாக்கப்பட்டது. பிறகு அந்த அந்த பக்தர் நெருப்பு மிதித்தார். ஆணி செருப்பை அணிந்து நடந்து சென்றார். அதன்பிறகு 26 அடி உயரம் கொண்ட முருகர் தேரை அவர் முதுகில் அலகு குத்தி இழுத்து வந்தார். முன்னதாக பக்தர் தமிழ்வாணனுக்கு கோயில் சார்பில் அபிஷேகம் நடத்தப்பட்டது. 

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கி தீ மிதித்தும், 16 அடி உயரமான கம்பத்தில் அலகு குத்தி அந்தரத்தில் செடல் சுற்றியும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

பின்னர் இரவு முத்து பல்லக்கில் வள்ளி தெய்வானை உடனுறை பாலசுப்ரமணியர் சிறப்பு அலங்கரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ரமேஷ் என்கிற முருகன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

சோமாசிபாடியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு அதிகாலையில் உற்சவருக்கு பால்,தயிர், இளநீர்,பன்னீர், சந்தனம் உள்பட பல்வகைவாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக,ஆராதனையும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு,தீபாராதனையும் நடந்தது.

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

இதில் சுற்றுப்புற ஊர்களிலிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவண்ணாமலை:விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

கலசப்பாக்கம் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீசுயம்பு சிவசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

 -------------------------------------

படங்கள்-பார்த்திபன்

Next Post Previous Post

No comments