புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

திருவண்ணாமலையில் குடிக்க பணம் தராததால் ஆத்திரம்-3 பேர் கைது, 3 பேர் தலைமறைவு

திருவண்ணாமலையில் குடிக்க பணம் தர மறுத்த புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையொட்டி 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

திருவண்ணாமலை திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள அருணகிரிபுரம் 3 வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜரத்தினம்(வயது 34). கூலி வேலை செய்து வந்தார். திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. 

பொங்கல் பண்டிகை நாளான நேற்று, ராஜரத்தினத்திடம் திருவண்ணாமலை அய்யங்குளம் தெருவைச் சேர்ந்த பழனி மகன் தரணிதரன் மது குடிக்க பணம் கேட்டாராம். பணம் தர ராஜரத்தினம் மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் தரணிதரன், ராஜரத்தினத்தை அடித்தாராம். மேலும் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. 

இது சம்மந்தமாக ராஜரத்தினம், தனது அக்காள் ராஜலட்சுமி, மாமா செல்வம் (ராஜலட்சுமியின் கணவர்) ஆகியோருடன் நகர போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இது பற்றி தெரிந்ததும் தரணிதரன் மீண்டும் அருணகிரிபுரத்திற்கு சென்று பாட்டல்களை வீசி ரகளையில் ஈடுபட்டாராம். போலீஸ் சென்றதும் அவர் தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சமாதானம் பேசிக் கொள்ளலாம் என தரணிதரனும், அவரது தரப்பினரும் ராஜரத்தினத்தை அழைத்தனராம். இதையடுத்து ராஜரத்தினம், தனது அக்காள் ராஜலட்சுமியுடன் ஆடு தொட்டி தெரு சந்திப்பிற்கு சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில் அவர்களை தரணிதரன், அவருடன் சென்ற உதயா, ஹரி, அருண்குமார், மணி, ராணி ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. கத்தியால் குத்தியதில் ராஜரத்தினமும், ராஜலட்சுமியும் படுகாயம் அடைந்தனர். 

2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ராஜரத்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணிதரன், உதயா, அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து அசாம்பாவிதத்தை தடுக்க அருணகிரிபுரம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட தரணிதரன் மீது சிக்கன் கடையில் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வழக்கும் ஏற்கனவே உள்ளது.  

திருக்கோயிலூர் ரோடு பகுதி அடிக்கடி தகராறு சம்பவங்கள் நடைபெற்று வரும் இடமாக உள்ளது. இங்கு அரசு பள்ளிகள், நகராட்சி அலுவலகம், மாவட்ட திமுக அலுவலகம் போன்றவை உள்ளது. எனவே இப்பகுதியில் போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  

Next Post Previous Post

No comments