உண்டியல் வருமானம்-இந்த மாதமும் அள்ளித் தந்த பக்தர்கள்

உண்டியல் வருமானம்-இந்த மாதமும் அள்ளித் தந்த பக்தர்கள் 

அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் வருமானம் விவரம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு மார்கழி மாதமும் உண்டியல் காணிக்கை குறையாமல் வந்துள்ளது நிர்வாகத்தை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. 

உண்டியல் வருமானம்-இந்த மாதமும் அள்ளித் தந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் தினமும் அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் கோயிலுக்கு வருமானமும் கூடியுள்ளது. தீபத்திருவிழா நடைபெற்ற கடந்த கார்த்திகை மாதம் அண்ணாமலையார் கோயிலுக்கு முதன்முறையாக ரூ.3 கோடியே 62 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது. 

கடந்த 25 மற்றும் 26ந் தேதி மார்கழி மாத பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் வைகுந்த ஏகாதசி, ஆங்கில வருடப்பிறப்பு, விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் மார்கழி மாத பவுர்ணமி உண்டில்கள் திறந்து எண்ணும் பணி அண்ணாமலையார் கோயிலில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் இரா.ஜீவானந்தம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அலங்கார மண்டபத்தில் நடைபெற்ற இப்பணியில் 450 சிவனடியார்கள், தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

உண்டியல் வருமானம்-இந்த மாதமும் அள்ளித் தந்த பக்தர்கள்

இதில் பக்தர்கள் ரூ.3 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதோடு 210 கிராம் தங்கம், 1695 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல் காணிக்கை தொகை அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. 

கடந்த கார்த்திகை மாதம் போல் மார்கழி மாதமும் உண்டியல் வருமானம் ரூ.3 கோடியை தாண்டியிருப்பது அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதே சமயம் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருப்பது பக்தர்களை வேதனை அடையச் செய்திருக்கிறது. அமர்வு தரிசனம் ரத்து என்ற அறிவிப்பு எந்த அளவிற்கு பக்தர்களுக்கு சாதகமாக அமையும் என்பது போக போகத்தான் தெரியும். 

கடந்த 2023 ஆம் வருடம் அண்ணாமலையார் கோயிலுக்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்? அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டன? என்ற விவரங்களை கோயில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

 ------------------------------------


Next Post Previous Post

No comments