துயர் துடைக்க கதவுகள் திறந்தே இருக்கும்-புதிய கலெக்டர் பேட்டி

துயர் துடைக்க கதவுகள் திறந்தே இருக்கும்-புதிய கலெக்டர் பேட்டி

மக்களின் துயரை துடைக்க எந்நேரமும் கதவுகள் திறந்தே இருக்கும் என திருவண்ணாமலை புதிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். 

துயர் துடைக்க கதவுகள் திறந்தே இருக்கும்-புதிய கலெக்டர் பேட்டி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக தெ.பாஸ்கர பாண்டியன், இன்று (29.01.2024) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பழைய கலெக்டர் முருகேஷ் பொறுப்புகளை ஒப்படைத்தார். 

பிறகு பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கடைகோடி மக்களிடம் அரசு நலத்திட்டங்களை சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் அயராது பாடுபடும். அனைத்து தரப்பு மக்களின் நலன்களில் தொடர்ந்து அக்கறை செலுத்தப்படும். ஊரக பகுதியான இப்பகுதியில் விவசாயிகள் நலன்களை பாதுகாப்பதில் சீரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

துயர் துடைக்க கதவுகள் திறந்தே இருக்கும்-புதிய கலெக்டர் பேட்டி

கோயில் மாநகரமான திருவண்ணாமலையில் பல்வேறு ஊர்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும். அதுமட்டுமன்றி மக்களின் துயர்களை துடைப்பதற்கு இந்த கதவுகள் திறந்தே இருக்கும். கடந்த மாவட்ட ஆட்சியர்களின் முன்னெடுப்புகள் சீரிய முறையில் செயல்படுத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

வேளாண்மை துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முந்தைய கலெக்டர் பா.முருகேஷ் கூறியதாவது, 

துயர் துடைக்க கதவுகள் திறந்தே இருக்கும்-புதிய கலெக்டர் பேட்டி

பல பதவி உயர்வுகள் கிடைத்தாலும் கூட திருவண்ணாமலை மாவட்டம் எனக்கு ஸ்பெஷல்தான். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் எனக்கு ஒத்துழைத்தார்கள். யாருமே முகம் சுளிக்கவில்லை. இது சரியில்லை, அது சரியில்லை என எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் சொல்லவில்லை. எனவே இங்கிருந்து புறப்படுவது மன நிறைவாக உள்ளது. 

இவ்வாறு முருகேஷ் கூறினார். 

அதன்பிறகு புதிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

50 வயதாகும் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூரில் கலெக்டராக இருந்த போது பனை விதைகளை நடுவதிலும், பண்ணை குட்டைகளை அமைப்பதிலும் கின்னஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-------------------------------------


Next Post Previous Post

No comments