திருவண்ணாமலை புதிய கலெக்டர் பற்றிய சிறு குறிப்பு

திருவண்ணாமலை புதிய கலெக்டர் பற்றிய சிறு குறிப்பு

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த பா.முருகேஷ், வேளாண்மைத் துறை இயக்குநராக மாற்றப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டி.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

திருவண்ணாமலை புதிய கலெக்டர் பற்றிய சிறு குறிப்பு

புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு திருச்சியில் துணை கலெக்டராக அரசு பணியில் சேர்ந்தார். பிறகு சேலம், தருமபுரி மாவட்டங்களில் பணியாற்றி சென்னையில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் பொது மேலாளராக பணியாற்றினார். தொடர்ந்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராக பணியில் அமர்த்தப்பட்டார். 

2013ல் நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய பிறகு அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி பதவி உயர்வு கிடைத்தது. இதைத் தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு அலுவராக (2018-2020) பணியாற்றினார். 

முதன்முறையாக பாஸ்கர பாண்டியன், 2021ல் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் கலெக்டராக நியமிக்கப்பட்டார். ராணிப்பேட்டை கலெக்டராக இருந்த போது தனது 3 வயது மகன் பிரனேஷின் பிறந்த நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுடன் வித்தியாசமான முறையில் கொண்டாடினார். 

திருவண்ணாமலை புதிய கலெக்டர் பற்றிய சிறு குறிப்பு

திருப்பத்தூர் கலெக்டராக பணியாற்றிய போது மாடப்பள்ளி பகுதியில் மது போதைக்கு அடிமையான தாய்-தந்தையிடமிருந்து 2 மகள்களையும் மீட்டு அவர்களது படிப்பு தொடர தேவையான நடவடிக்கையை எடுத்தார். மேலும் பள்ளி செல்லா மாணவர்கள் 600 பேரை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தார். இதற்காக அவர் மாணவ-மாணவியர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி அவர்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்தது அனைவரது பாராட்டையும் பெற்றது. 

-------------------------------------------------



Next Post Previous Post

No comments