போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு குழு
போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு குழு
திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சிறப்பு குழு நகரம் முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (08.12.2023) கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும், மணல் கடத்தல், உணவு பொருள் வழங்கல், உணவு பாதுகாப்பு, மது ஒழிப்பு தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கடைகளில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் மணல் கடத்தலை ஒழிக்க தடுக்க சிறப்புப்படை அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்க கிராம அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக அளவு விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் உரிய விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கையும், அறிக்கையும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சிறப்பு குழு நகரம் முழுவதும் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இக்கூட்டத்தில் கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------
No comments