பெட்ரோல் பங்க் மேலாளரை வெட்டிய 4 பேர் கைது

பெட்ரோல் பங்க் மேலாளரை வெட்டிய 4 பேர் கைது

4 பேருக்கு வலைவீச்சு- கொலை முயற்சி வழக்கு பதிவு 

திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்க் மேலாளர் கத்தியால் வெட்டப்பட்ட வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

பெட்ரோல் பங்க் மேலாளரை வெட்டிய 4 பேர் கைது

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ளது செந்தூர் முருகன் பெட்ரோல் பங்க். இது திமுக பிரமுகருக்கு சொந்தமானதாகும். 

இந்த பெட்ரோல் பங்கிற்கு நேற்று இரவு 6-15 மணியளவில் திருவண்ணாமலை கீழ்நாத்தூரைச் சேர்ந்த விக்னேஷ்(வயது 24), வேங்கிக்காலைச் சேர்ந்த சந்துரு ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர்களை தடுத்து பணம் கேட்ட போது எங்ககிட்டேயே பணம் கேட்கிறாயா என தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இது பற்றி பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமன்(57) அவர்களை தட்டிக் கேட்டாராம். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

இது பற்றி விக்னேஷ் தனது நண்பர்களுக்கு போன் செய்து சொன்னாராம். இதையடுத்து புல்லட் உள்ளிட்ட 2 வானகங்களில் அந்த பெட்ரோல் பங்கிற்கு 5க்கும் மேற்பட்ட நபர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமனை சரமாரியாக தாக்கினார்கள். அவருக்கு தலை மற்றும் முதுகில் கத்தி வெட்டும் விழுந்தது. பிறகு அனைவரும் பைக்கில் தப்பி சென்று விட்டனர். 

ரத்தம் சொட்ட, சொட்ட ரகுராமன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தை கண்டித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். 

இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், பார்த்திபன்(23), மணிவாசன்(21), ஜெகநாதன்(21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சந்துரு உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Post Previous Post

No comments