16 பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு

16 பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

16 பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலிபணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை / நடுநிலை /தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால், மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்தவற்கு ஏதுவாகவும், காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்திர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில் தற்காலிகமாக காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15000, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12000 மாத தொகுப்பூதியத்தில் கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.

வழிகாட்டும் நெறிமுறைகள்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பிடும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

16 பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்:

அரசங்குப்பம், அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி- கணிதம் 

காயம்பட்டு அரசு ஆதிந நடுநிலைப்பள்ளி - சமூகஅறிவியல்.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்:

அரசங்குப்பம், திருப்பனமூர், அருகாவூர், எறும்பூர், கூடலூர், அருணாகிரிமங்கலம், கேட்டவரம்பாளையம், மேலாரணி, தென்பள்ளிபட்டு, அரிதாரிமங்கலம், ஆண்டிப்பட்டி ஆகிய தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

நடுநிலைப்பள்ளி காலிப்பணியிடம்: 

வீரளூர், நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

தலைமையாசிரியர் காலிப்பணியிடம் (இடைநிலை ஆசிரியர் பணியிடம்):

முக்கூர், அரசங்குப்பம், ஓசூர் ஆகிய தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

கல்விதகுதி/வயது:

பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் (TET)

பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் 29.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments