சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
சேதமடைந்த கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
பொது கட்டிடங்கள், பள்ளி-கல்லூரி, பஸ் நிலையத்தையும் இடிக்க உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேதமடைந்த பொது கட்டிடங்கள், பள்ளி-கல்லூரி, பஸ் நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களை இடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; குறித்த ஆய்வுக்கூட்டம் காணொளிக்காட்சி வாயிலாக கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, நேர்முக உதவியாளர் வீ.வெற்றிவேல், காட்டாட்சியர்கள் ஆர்மந்தாகினி (திருவண்ணாமலை), திருமதி. ம.தனலட்சுமி (ஆரணி) மற்றும் அனைத்து வட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை ஆட்சியர் நிலையிலான பொறுப்பு அலுவலர்கள் (ழேனயட ழுககiஉநசள) மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் சேதமடைந்த பொது கட்டிடங்கள் பாழடைந்த கட்டிடங்கள,; பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், மேல்நிலைநீர்தேக்க தொட்டிகள் ஆகியவற்றினை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
மேலும் இயற்கை இடர்பாட்டினால் இறக்கும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கிட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பிரேத பரிசோதனை அறிக்கையை உடன் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறும், தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஆகியோர் வெள்ள பாதிக்க கூடிய பகுதிகளை கள ஆய்வு செய்து நிவாரண மையங்களையும், உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் வாகனங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்,நெடுஞ்சாலைத்துறை பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டுமெனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
-----------------------------
No comments