கண்டக்டர் மீது தாக்குதல்-பஸ் நிலையத்தில் பரபரப்பு
கண்டக்டர் மீது தாக்குதல்-பஸ் நிலையத்தில் பரபரப்பு
அரசு பஸ் கண்டக்டரை பயணி தாக்கியதால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்காமல் டிரைவர், கண்டக்டர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
செய்யாறு பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் சென்னை சென்று விட்டு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தது. செய்யாறு பறையம்பாடியைச் சேர்ந்த குமார் என்பவர் அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். அந்த பஸ்சில் திருவண்ணாமலை அடுத்த நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவர் பயணித்தார்.
திருவண்ணாமலைக்கு டிக்கெட் வாங்க பிச்சாண்டி ரூ.200 கொடுத்ததாகவும், டிக்கெட்டுக்கு போக மீதி பணத்தை பிச்சாண்டியிடம் தந்து விட்டதாக கண்டக்டர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் டிக்கெட் வாங்க ரூ.500 தந்ததாக பிச்சாண்டி தரப்பில் சொல்லப்பட்டது. இதனால் அவருக்கும், அந்த பஸ்சின் கண்டக்டர் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கண்டக்டர் குமார் |
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று காலை அந்த பஸ் வந்த போது பிச்சாண்டி, கண்டக்டரை குமாரை தாக்கி பணப்பையை பறித்ததாக சொல்லப்படுகிறது. இதைப்பார்த்த மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் பிச்சாண்டியை பிடித்து அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கண்டக்டர் தாக்கப்பட்டதால் அரசு பஸ்களை புறக்காவல் நிலையம் அருகில் நிறுத்தி விட்டு அந்த காவல் நிலையத்தை டிரைவர், கண்டக்டர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது சம்மந்தமாக கண்டக்டர் குமார், கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்த கிழக்கு போலீசார் பிச்சாண்டியை கைது செய்தனர். இதையடுத்து பஸ்கள் இயங்கத் தொடங்கின.
No comments