நிலம் ஆர்ஜிதம் செய்தால்தானே வேலைவாய்ப்பை தர முடியும்?

நிலம் ஆர்ஜிதம் செய்தால்தானே வேலைவாய்ப்பை தர முடியும்?

அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர விவசாயம் நடைபெறாத நிலங்கள் தொழிற்சாலைகளுக்காக ஆர்ஜிதப்படுத்தப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

நிலம் ஆர்ஜிதம் செய்தால்தானே வேலைவாய்ப்பை தர முடியும்?

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வளாக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமினை அமைச்சர் எ.வ.வேலு இன்று துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அவர் 145 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கல்வி கடன் பெறுதற்கான ஆணையினை வழங்கி பேசினார். 

அவர் பேசியதாவது, 

முக்கியமாக கல்வி கடன் வாங்குவதன் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படும் முடியும். கல்வி கடன் வழங்குவதால் தொழில் நடத்திப் பொருட்களை ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. கல்வியின் மூலம் தான் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் வங்கிகள் கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஏமாந்து நின்றோம்

இந்தியாவிலேயே இரண்டாவதாக அந்நிய செலவாணி ஈட்டிய ஆம்பூர், வாணியம்பாடி எங்களுடன் இருந்தது. இப்போது அதெல்லாம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்று விட்டது. ராணிப்பேட்டை சிப்காட்டும் விஷாரமும் வேலூருக்கு சென்று விட்டது. திருவண்ணாமலையில் இருப்பவர்கள் ஏமாந்து நின்றோம். 

எங்களுக்கு எந்த தொழிற்சாலையும் கிடையாது ஆணி செய்யக்கூடிய தொழிற்சாலை கூட எங்கள் மாவட்டத்தில் இல்லை. செய்யார் சுகர் மில் ஒன்றுதான் இருந்தது. அப்படி விவசாயம் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாயி வீட்டு பிள்ளைகள் மட்டும் தான் படிக்க முடியும். அவர்கள் பட்டதாரிகளாக ஆவதற்கு தொழில்களை நடத்துவதற்கு வங்கியாளர்கள் ஒருங்கிணைந்து அவர்களுக்கெல்லாம் தாராளமாக கடனை தர வேண்டும். பிற மாவட்டங்களை ஒப்பிட்டுக் கொடுத்தால் அது சரிவர வராது. 

படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை  நமது மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2006 -2011 ஆம் ஆண்டில் நான் பெரும் முயற்சி செய்து செய்யார் சிப்காட் பூங்காவை கொண்டு வந்தேன்.

நிலம் ஆர்ஜிதம் செய்தால்தானே வேலைவாய்ப்பை தர முடியும்?

உற்பத்தி இல்லா நிலம்

பயிரே இல்லாமல் 15 வருடமாக கரம்பாக உள்ளது. ஆனால் கையகப்படுத்த விடமாட்டேன் என்கிறார்கள். எதற்காக நிலத்தை எடுக்கிறோம்? தனிப்பட்ட வேலுக்காகவா? தமிழ்நாட்டு முதலமைச்சருக்காகவா? மாவட்ட ஆட்சித் தலைவருக்காகவா? நிலத்தை எடுக்கிறோம் என்று சொன்னால் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு, பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தானே? 

உற்பத்தி இல்லாத நிலம், விளை நிலமே இல்லாத நிலம். கரடு என்று சொல்வார்கள். கல்லாககுத்து என சொல்லுவார்கள். அப்படிப்பட்ட இடத்தை எடுத்தால் தானே பட்டாதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தர முடியும்? பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை தருவதன் மூலமாகத் தானே இந்த மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும்? 

இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அருண்பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கே.பி.கணேசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதே சமயம் ஆதரவு தெரிவித்தும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்த நிலையில் விவசாயம் நடைபெறாத நிலங்கள்தான் தொழிற்சாலைகளுக்காக ஆர்ஜிதப்படுத்தப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். 

-------------------------------


Next Post Previous Post

No comments