பொதுமக்கள் பிரச்சனையின்றி வீட்டுமனை வாங்க வேண்டும்

பொதுமக்கள் பிரச்சனையின்றி வீட்டுமனை வாங்க வேண்டும்

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் உண்மையாக இருந்து நமக்காக எப்படி பார்த்து பார்த்து மனையை வாங்குவோமோ அதே போல் பிறரையும் வாங்கச் செய்ய வேண்டும் என ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கேட்டுக் கொண்டார்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஹிமாலாயா ஓட்டலில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வேலூர் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஏ.நரேஷ்சந்த் ஜெயின் தலைமை தாங்கினார். கமல்சந்த் ஜெயின், எஸ்.பன்னீர்செல்வம், ஜெ.எச்.அனீப், எம்எஸ்எம்.மாலிக், கமலக்கண்ணன் சுபம்ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சத்ய சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் மனிதர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியம். அந்த இருப்பிடத்தினை கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் குறிப்பாக வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பில்டர்ஸ் தொழில் செய்பவர்கள், நாம் ஒரு வீட்டுமனையை தேர்ந்தெடுத்தால் அதை எந்த வகையில் எல்லாம் சட்ட விதி முறை, வில்லங்கம், தொடர்பு ஆவணங்கள், தாய் பத்திரம், பட்டா, அனுமதி பார்ப்போமோ, எப்படி பார்த்து, பார்த்து வாங்குவோமோ அதே போல் நாம் நேசிக்கிற இந்த தொழிலில் உண்மையும், உத்தமுமாக இருந்து பிறரும் அதே சங்கடமின்றி, சிரமமின்றி, கஷ்டமின்றி வாங்கச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் எந்த வகையிலும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்கின்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த மண்ணையும், இந்த மக்களையும், இந்த தொழிலையும் நேசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

பொதுமக்கள் பிரச்சனையின்றி வீட்டுமனை வாங்க வேண்டும்

சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு டிடிசிபி உதவி இயக்குநர் வி.பி.பவித்ரா பதிலளித்தார். 

கூட்டத்தில் தேசிய அமைப்பு செயலாளர் பி.நேருநகர் நந்து, தேசிய துணை தலைவர் செந்தில்குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.தமிழரசன், தேசிய துணை செயலாளர்கள் டி.கிருஷ்ணகுமார், கே.மொய்தீன், அப்துல்காதர், தேசிய செயற்குழு உறுப்பினர் இ.பாபு (எ) வேடியப்பன், தலைமை நிலைய செயலாளர் ஆர்.கார்த்தி, மாநில பொருளாளர்கள் எஸ்.ஜெயசங்கர், எஸ்.வி.ரவி, மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெய்சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்.பரந்தாமன், குரு.கண்ணன் உள்பட பலர் பேசினர்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பட்டா வீட்டுமனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்களின் நலன்கருதி மனை வரன்முறை சட்டத்தை மேலும் 6 மாத காலம் 29.02.2024 வரை நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டதற்காக தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கும், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் திட்டங்களை விரைந்து முடிக்க உள்ளுர் திட்ட குழுமங்களை ஏற்படுத்திட வேண்டும், பதிவுத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்திடும் வகையில் பதிவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழுவை அமைத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக இருந்தால் குறைவு முத்திரை தீர்வை சட்ட பிரிவு 47/A1-ன் கீழ் சரியான சந்தை மதிப்பிற்கு ஈடாக பதிவு செய்தும், பிறகு வருவாய் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு முரண்பாடுகளை களையவும் சட்டம் வழி வகுத்துள்ளது. ஆனால் பதிவுத் துறை ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கிறது. இது முத்திரை தீர்வை சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே சொத்துக்களை எந்த விதமான தங்கு தடையின்றி பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும், வீடு வாங்கும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் கட்டுனர்கள் விற்பனை செய்யும் புதிய வீடுகளில் கட்டடப் பணி நிறைவு சான்று பெற்றிருந்தாலும், மனை மற்றும் வீட்டுடன் பதிவு செய்ய வலியுறுத்தாமல் மனைகளை மாத்திரம் பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

                                                           -----------------------------------



                                                            -----------------------------------
Next Post Previous Post

No comments