காவல் எல்லை தெய்வ வழிபாடுடன் தீபவிழா நாளை துவக்கம்

காவல் எல்லை தெய்வ வழிபாடுடன் தீபவிழா நாளை துவக்கம்  

காவல் எல்லை தெய்வ வழிபாடுடன் தீபவிழா நாளை துவக்கம்

3 நாட்கள் காவல் எல்லை வழிபாட்டுடன் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நாளை துவங்குகிறது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், உலக புகழ் பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

திருவிழா விவரம்

தீபத்திருவிழா சிறப்புடன் நடைபெற காவல் எல்லை தெய்வ வழிபாடு 

14ந் தேதி(நாளை) செவ்வாய் இரவு- காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் உற்சவம்

15ந் தேதி இரவு- சிம்ம வாகனத்தில் பிடாரியம்மன் உற்சவம்

16ந் தேதி இரவு- விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம்(பூமாதேவியை மகிழ்விக்கும் பரிகாரம்). பிறகு விநாயக பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்திலும், அதைத் தொடர்ந்து சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் மாடவீதியை வலம் வருவர். 

காவல் எல்லை தெய்வ வழிபாடுடன் தீபவிழா நாளை துவக்கம்

10 நாள் திருவிழா

முதல் நாள்-(17ம் தேதி) காலை- கொடியேற்றம். அதைத்தொடர்ந்து, காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களிலும், இரவு முஷீகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்தில் வீதி உலா

2ம் நாள் (18ம் தேதி) காலையில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா

3ம் நாள் (19ம் தேதி) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்திலும்,  இரவு சிம்ம வாகனம், வெள்ளி அன்னவாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா.

4ம் நாளான (20ம் தேதி) காலை நாகவாகனத்தில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு, இதர வெள்ளி வாகனங்களில் வீதி உலா

5ம் நாளான (21ம் தேதி) காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி முஷீகம், வெள்ளி மயில், பெரிய ரிஷப வாகனத்தில் வீதி உலா

63 நாயன்மார்கள் 

6ம் நாளான (22ந் தேதி) காலை விநாயகர், சந்திரசேகரர் முஷிகம், வெள்ளி யானை வாகனத்திலும், 63 நாயன்மார்கள் ஊர்வலமும் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதங்களில் பவனி வருவார்கள். 

மகா தேரோட்டம்

7ம் நாளான (23ம் தேதி) காலை முதல் இரவு வரை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம். காலை 7-30 மணியிலிருந்து 8-30 மணிக்குள் தனூர் லக்கனத்தில் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அதன்பிறகு வள்ளி தெய்வானை சமேத முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேசுவரர் தேர்கள் புறப்பாடு நடைபெறும்.

8ம் நாளான (24ம் தேதி) காலை குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரரும், மாலை தங்க மேருவில் பிச்சாண்டவர் உற்சவமும் நடக்கும். இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளும் பவனி நடைபெறும். 

9ம் நாளான (25ம் தேதி) காலை புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

காவல் எல்லை தெய்வ வழிபாடுடன் தீபவிழா நாளை துவக்கம்

பரணி, மகாதீபம்

10ம் நாளான (26ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோபில் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த வருட தீபத்திருவிழாவில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெப்பல் திருவிழா

27ம் தேதி இரவு அய்யங்குளத்தில் சந்திரசேகர், 28ந் தேதி இரவு பராசக்தி அம்மன், 29ந் தேதி சுப்பிரமணியர் தெப்பலும் நடைபெறும். 

அண்ணாமலையார் கிரிவலம்

28ந் தேதி செவ்வாய்கிழமை உண்ணாமலையம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். 30ந் தேதி சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவுடன் இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது. 

தீபத் திருவிழா தொடங்குவதi முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்களும், அலங்கார மண்டமும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. அலங்கார மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள சிவன்-பார்வதி, விநாயகர், முருகர் உருவங்களும், லிங்கமும் சீரியல் பல்புகளால் உருவாக்கப்பட்டு வெளிச்சத்தில் மின்னுவது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

                                                              --------------------------------