தீபத்திருவிழா-3 நாட்கள் மது விற்பனைக்கு தடை
தீபத்திருவிழா-3 நாட்கள் மது விற்பனைக்கு தடை
நட்சத்திர ஓட்டல்களில் பார்கள் இயங்கவும் தடை
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி திருவண்ணாமலை பகுதியில் மது விற்பனைக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
இது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் 2023-ஆம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் அரசு சில்லறை மதுபானக் கடை எண்:9481 (காமராஜர் சிலை அருகில்), கடை எண்:9261 (மணலூர்பேட்டை சாலை), கடை எண்:9490 (வேங்கிக்கால் புறவழிச்சாலை – பைபாஸ்) ஆகியவற்றில் 25.11.2023 அன்று நண்பகல் 12.00 மணி முதல் 27.11.2023 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மதுவிற்பனை 3 நாட்கள் இருக்காது.
மேலும் திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் (எப்எல்3) ஓட்டல் திரிசூல், ஓட்டல் நளா, ஓட்டல் அஷ்ரேய்யா, ஓட்டல் அம்மாயி மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்கால் (எப்எல்4எ) ஆகிய உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு 25.11.2023 அன்று நண்பகல் 12.00 மணி முதல் 27.11.2023 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments