செய்யார் சிட்பண்ட் உரிமையாளர் ஜெயிலில் அடைப்பு

செய்யார் சிட்பண்ட் உரிமையாளர் ஜெயிலில் அடைப்பு

செய்யாரில் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்களை தராததால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஆளும்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ மாமூல் கேட்டு மிரட்டுவதாக புகார் கூறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

செய்யாறில் உள்ள காஞ்சிபுரம் சாலையில் செய்யார் ஏபிஆர் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை அல்தாப் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பொதுமக்களிடமிருந்து ரூ.100 முதல் ரூ.5ஆயிரம் வசூலித்து பண்டிகை காலங்களில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் மாத சீட்டும் கட்டி வந்தனர். லட்சக்கணக்கில் பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளாராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் மளிகை பொருட்கள், பட்டாசு மற்றும் பல்வேறு பரிசுகளை அறிவித்திருந்தது. இந்த பொருட்களை வழங்க காலதாமதம் ஆனதாக சொல்லப்படுகிறது. 

செய்யார் சிட்பண்ட் உரிமையாளர் ஜெயிலில் அடைப்பு

இதனால் பணம் கட்டியவர்கள், அந்த சிட் பண்ட் அலுவலகத்திற்குள் நுழைந்து சோபா, ஏசி, பீரோ, மின்விசிறி, அலமாரிகள், நாற்காலிகள், டிவி மற்றும் கையில் கிடைத்த பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றனர். பொருட்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது. 

அதேபோல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மளிகை கடையில் இருந்த மூட்டைகளையும் அள்ளிச் சென்றது. மேலும் அதே நிறுவனத்திற்கு சொந்தமான ஓட்டல் கடையும் சூறையாடப்பட்டது. உரிமையாளர் தலைமறைவாகி விட்டதால் பொருட்களை எடுத்துச் சென்றதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. 

செய்யார் சிட்பண்ட் உரிமையாளர் ஜெயிலில் அடைப்பு
அல்தாப்

இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ஏபிஆர் சிட்ஸ் உரிமையாளர் அல்தாப், தான் சிவகாசிக்கு பட்டாசு கொள்முதல் செய்ய சென்றிருந்ததாகவும், தலைமறைவாகவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் மேலும் அவர் கூறியிருப்பதாவது,

எனது அலுவலகம், வீடு, ஓட்டலில் நுழைந்து அடித்து நொறுக்கி பொருட்களை தூக்கிச் சென்று விட்டனர். வீட்டிலிருந்த நகை-பணத்தை காணவில்லை. நான் தலைமறைவாகி விட்டேன் என்ற வதந்தியை நம்பி இப்படி செய்திருக்கின்றனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் நிறைய உள்ளது. தொழிலை ஒழுங்காக செய்ய முடியவில்லை. கட்டிங் கேட்கின்றனர். சென்னை, காஞ்சிபுரத்திலிருந்து புது புது கட்சிகள் வருகின்றன. 

நமது ஊரில் (செய்யாறு) இருக்கின்ற ஆளும்கட்சி எக்ஸ் எம்.எல்.ஏ(பெயரை குறிப்பிடவில்லை) எனக்கு கட்டிங் கொடு, எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கேட்கிறார். பொதுமக்களுக்கு தர வேண்டியதை இவர்களுக்கே கொடுத்தால் நான் எப்படி தொழில் செய்ய முடியும்? காவல்துறை எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு பாதுகாப்பு கொடுத்தால் மக்களிடம் பேசி அவர்களுக்கு பொருட்களை தர தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். 

செய்யார் சிட்பண்ட் உரிமையாளர் ஜெயிலில் அடைப்பு

இந்நிலையில் ஆந்திராவில் இருந்த அல்தாப்பையும், அவரது நிறுவன மேலாளர் கமலக்கண்ணனையும் போலீசார் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

                                                    ------------------------------------------

முந்தைய செய்தி...

https://www.newsthiruvannamalai.com/2023/11/the-chitband-company-is-a-gang-that-looted-the-hotel-store.html

Next Post Previous Post

No comments