அண்ணாமலையார் கோயில் கருணை இல்லத்தில் மாணவர் சேர்க்கை
அண்ணாமலையார் கோயில் கருணை இல்லத்தில்
மாணவர் சேர்க்கை அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் கீழ் கோயில் நடத்தப்படும் சிறுவர் கருணை இல்லத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சிறுவர் கருணை இல்லத்தில் தங்கி கல்வி பயில மாணவர்கள் சேர்க்கைக்கு இந்து மதத்தைச் சார்ந்த கீழ்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் எதிர்வரும் 01.11.2023 முதல் 30.11.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திருக்கோயில் நிர்வாகத்தால் சிறுவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம். மருத்துவ வசதி. கல்வி பயிற்றுவித்தல் ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.
தகுதிகள்
1) இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2) சிறுவர் கருணை இல்லத்தில் சேர வயது வரம்பு 5 வயது முதல் 15 வயது வரை இருக்க வேண்டும்.
3) தாய் தந்தையர் இருவரும் இல்லாமல் உள்ள நிலையில் ஆதரிக்க ஒருவரும் இல்லாத சிறுவர்.
4) தந்தையை இழந்து தாய் மட்டும் உள்ள நிலையிலும், தாயை இழந்து தந்தை மட்டும் உள்ள நிலையிலும் உள்ள ஆதரவற்ற சிறுவர் சேர்க்கை படிவங்கள் திருக்கோயில் வலைதளம்.http://annamalalyar hros.tn.gov.in பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் - 606 601.
விதிமுறைகள்
1. இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
2. மாணவரின் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவர் அல்லது இருவருமே இல்லாத மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
3. 5 முதல் 15 வயத்திற்குற்பட்டவராக மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவர்.
4. மாணவர்களை பாரிக்க வரும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனுமதிக்கப்படுவர் (மற்ற நாட்களில் பார்க்க அனுமதி இல்லை)
5. பெற்றோர் அல்லது பாதுகாவலர் எடுத்து வரும் வெளி உணவு அனுமதி இல்லை.
6. மாணவர்கள் கீழ்கண்ட விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்,
காலாண்டு. அரையாண்டு. முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள். தீபாவளி பொங்கல் பண்டிகைகள் விடுமுறை நாட்கள். குடும்ப விஷேசங்களுக்கு உரிய விபரங்கள் காண்பித்து முன்கூட்டியே தெரிவித்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.
7. கால அட்டவணையில் உள்ள கால விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
8. சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்று நகல்கள். மாற்றுச் சான்று
மாணவர் பிறப்பு சான்று, ஜாதி சான்று, தந்தை அல்லது தாய் இறப்பு சான்று, மாணவர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆதார் அடையாள அட்டை, மருத்துவச் சான்று மற்றும் மாணவரின் கடவுச்சீட்டு (Passport Size) புகைப்படம் 6 இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தில் கீழ்கண்ட விவரங்கள் இணைக்கப்பட வேண்டும்
மாணவர் பெயர், 2) தந்தை /தாய் / காப்பாளர் பெயர் (தந்தை, தாய் இறப்புச் சான்று), நிலையான முகவரி, தொலைபேசி எண், பிறந்த நாள் வயது (பிறப்பு சான்று நகல் இணைக்க வேண்டும்), மதம் மற்றும் சாதி (சாதி சான்று நகல் இணைக்க வேண்டும்), கல்வி தகுதி (கல்வி சான்று மற்றும் மாறுதல் சான்று நகல் இணைக்க வேண்டும்).
குடும்ப அட்டை நகல் இணைக்க வேண்டும், ஆதார் அடையாள அட்டை நகல் இணைக்க வேண்டும், காப்பாளர் பெயர் முகவரி தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவித்து உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும்.
நன்னடத்தைச் சான்று
1) பள்ளியில் பெற்ற நன்னடத்தைச் சான்று
2) சரக காவல் துறை காவல் ஆய்வரால் வழங்கப்பட்ட குற்றமற்றவர் என்பதற்கான அசல் சான்று இணைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை கோயில் இணை ஆணையாளர் சி.ஜோதி தெரிவித்துள்ளார்.
---------------------------------------
No comments