எஸ்.சி விடுதிகளில் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவ- மாணவியர் விடுதிகளில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக மன்ற கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளில் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்ட துவக்க விழா நடைபெற்றது.
அனைவரையும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை ச.சாந்தி வரவேற்றார். அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேமபாட்டு திட்ட மாநில சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான மு.கணபதி திட்ட விளக்கவுரையாற்றினார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் விழாவினை துவக்கி வைத்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டம் இன்றைக்கு அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கல்வி ஒருவனை நல்ல குடிமகனாக மாற்றுகிறது. இளம் வயதில் சரியான முறையில் கல்வி கற்றால் உயர்ந்த நிலையை அடைய முடியும். நானும் 4 வருடம் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் இன்றைக்கு ஐஏஎஸ் அதிகாரியாக உங்கள் முன் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன். நீங்களும் என்னைபோல் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் திகழ வேண்டும் என குறிப்பிட்டார்.
விழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ஏ.தசரதன், பட்டதாரி ஆசிரியர் (ஓய்வு) வ.பழனி, சமூக ஆர்வலர்கள் இரா.தன்ராஜ், மு.கணபதி, இரா.பாலு, சமூக செயற்பாட்டாளர் முகில் தம்மபிரியன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் செ.முருகன், விடுதி காப்பாளர்கள் ஆர்.சரஸ்வதி, எம்.ஆறுமுகம் மற்றும் மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பெண்கள் முன்னேற்ற சங்க நிர்வாக அறங்காவலர் நேசக்குமாரி நன்றி கூறினார்.
No comments