அப்போலா மூலம் எஸ்.சி,எஸ்.டி மாணாக்கர்களுக்கு நர்சு பயிற்சி

அப்போலா மூலம் எஸ்.சி,எஸ்.டி மாணாக்கர்களுக்கு நர்சு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக டி.சி.எஸ் அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த  மாணாக்கர்களுக்கு செவிலியர் பயிற்சியை வழங்க உள்ளது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கிவருகிறது. அதன்அடிப்படையில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி (GNM-General Nursing and Midwifery) மற்றும் அடிப்படை (Post basic) இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த மாணாக்கர்களுக்கு டி.சி.எஸ் அயன் (TCS iON) மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் (Apollo MedSkills) நிறுவனம் FINE (Finishing Skills for Nursing Excellence) எனப்படும் செவிலியர் பயிற்சியை இணைந்து வழங்கவுள்ளது.

அப்போலா மூலம் எஸ்.சி,எஸ்.டி மாணாக்கர்களுக்கு நர்சு பயிற்சி

இப்பயிற்சியினை பெற 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புமுடித்த  மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள்  FINE(Finishing Skills for Nursing Excellence) எனப்படும் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள். 

இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி காலங்களில் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற  www.tahdco.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments