உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள்?
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 22 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதியதாக 16 ஆயிரத்து 293 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 01.01.2024 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டார். இதனை கோட்டாட்சியர் ரா.மந்தாகினி பெற்றுக் கொண்டார்.
இப்பட்டியலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் வருமாறு:-
செங்கம்(தனி)
ஆண்கள் - 135420, பெண்கள் -137525. இதரர்- 10. மொத்தம்- 272955
திருவண்ணாமலை
ஆண்கள் - 132136, பெண்கள் -140914 இதரர்- 40. மொத்தம்- 273090
கீழ்பென்னாத்தூர்
ஆண்கள் - 123867, பெண்கள் -128597 இதரர்- 11. மொத்தம்- 252475
கலசப்பாக்கம்
ஆண்கள் - 120186, பெண்கள் -123671 இதரர்- 08. மொத்தம்- 243865
போளூர்
ஆண்கள் - 117540, பெண்கள் -121558 இதரர்- 10. மொத்தம்- 239108
ஆரணி
ஆண்கள் - 132673, பெண்கள் -140123 இதரர்- 26. மொத்தம்- 272822
செய்யார்
ஆண்கள் - 126202, பெண்கள் -131829 இதரர்- 08. மொத்தம்- 258039
வந்தவாசி(தனி)
ஆண்கள் - 118634, பெண்கள் -122625 இதரர்- 05. மொத்தம்- 241264
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை- 2053500
ஆண்கள் - 1006658, பெண்கள் -1046842
கடந்த 05.01.2023 அன்று நமது மாவட்டத்தில், 1.1.2023 ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் 20,59,706 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். (ஆண்-1009394, பெண் 1050196 இதரர்-116)
அதன் பின்பு, வாக்காளர் பட்டியலின் தொடர் திருத்தப் பணி 05.01.2023 முதல் தொடங்கப்பட்டு படிவங்கள் 6, 7, 8 ஆகியவை பெறப்பட்டன. அவ்வாறு வரப் பெற்ற படிவங்களில் மூலமாக புதியதாக 16,293 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்-7363, பெண்-8926, இதரர்-4)
வாக்காளர் பட்டியலிலிருந்து 22,381 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்: இறந்தோர்- 6,152. இடம் பெயர்ந்தோர் - 15,648. இருமுறைப் பதிவு போன்ற காரணங்களுக்காக நீக்கம் செய்யப்பட்டுள்ளோர் - 581. இன்று வெளியிடப்படும், இப்பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் VoterHelpline என்ற மொபைல் செயலி வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் விவரம்
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்: 04.11.2023 (சனி),05.11.2023 (ஞாயிறு), 18.11.2023 (சனி), 19.11.2023 (ஞாயிறு)
படிவங்கள் பெறப்படும் நாட்கள்: 27.10.2023 முதல் 09.12.2023 வரை
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் - 05.01.2024
மேற்குறிப்பிட்ட 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான அனைத்து வேலை நாட்களில் மனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச் சாவடி அலுவலர்களிடம், அல்லது தேர்தல் ஆணைய இணையதளம், மற்றும் மொபைல் ஆப் மூலமாகவும் வாக்காளர்கள் மற்றும் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம் நடைபெறும் 4 நாட்களில் அந்தந்தப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக படிவங்கள் பெறப்படும். அங்கு வாக்காளர்கள் நேரில் சென்று உரிய படிவங்களை பெற்று தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தலை தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 2372 வாக்குச்சாவடிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments