ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரிக்கை

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரிக்கை

தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என கேட்டு திருவண்ணாமலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ப.சங்கர் தலைமை தாங்கினார். 

மாவட்ட அமைப்பு செயலாளர் கோ.பிரம்மானந்தன் மாவட்ட மகளிரணி தலைவர் எஸ்.சசிகலைகுமாரி மாவட்ட தலைமையிடச் செயலாளர் பி.ஜோதிலட்சுமி மாவட்ட துணை தலைவர் பி.ராமதாஸ் மாவட்ட இணை செயலாளர் சி.அன்பழகன் மாவட்ட சட்ட செயலாளர் பி.சீனுவாசன் கல்வி மாவட்ட தலைவர்கள் சு.பாஸ்கரன் எம்.உமாமகேஸ்வரி செய்யாறு கல்வி மாவட்ட கௌரவ தலைவர் ஏ.ஆயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட செயலாளர் பி.பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். மாநில துணை தலைவர் த.தமிழ்செல்வன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் த.சிவப்பிரகாசம் என்.வேதபுரி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி தொடங்கப்ப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியும் மேல்நிலைக்கல்வி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் வழிவகை செய்யப்படாமல் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் திருத்தம் செய்திட வேண்டும். செங்குத்து பதவி உயர்வு முறையை நடைமுறைப்படுத்தி பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். 

தலைமை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் இஎம்ஐஎஸ் பணிகளை மேற்கொள்ளவும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் நலத்திட்ட அலுவலர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடத்தை உருவாக்கிட வேண்டும் 2018க்குபின் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினி பயிற்றுநர் பணியிடங்களை வழங்கிட வேண்டும். 

மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கைகள் சார்ந்து அரசு விதிகளின்படி செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். 

இதில் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள், மற்றும்  மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் டி.பெருமாள் நன்றி கூறினார்.


Next Post Previous Post

No comments