நெல்மணியில் அ எழுத்து-கல்வியை துவங்கிய குழந்தைகள்
திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டுப் பள்ளி மற்றும் எஸ்கேபி வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்திய முதல் எழுத்து விழாவில் குழந்தைகளுக்கு நெல்மணியில் "அ" எழுத்தை எழுத வைத்து கல்வி துவக்கி வைக்கப்பட்டது.
விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும், இறுதி நாளும் ஆகும். இந்த நாளானது கற்றலைத் தொடங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் இன்று மாணவ-மாணவியர்களின் சேர்க்கை நடைபெற்றது.
திருவண்ணாமலை எஸ்.கே.பி வனிதா பன்னாட்டுப் பள்ளி மற்றும் எஸ்.கே.பி வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து இன்று முதலெழுத்து விழாவை நடத்தியது.
விழாவுக்கு எஸ்.கே.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி வரவேற்புரையாற்றினார். பி.ஆர்.ஓ. சையத் ஜஹிருத்தின் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம் நூலகர் தயாள வெங்கடேசன் மற்றும் எஸ்.கே.பி.வனிதா பன்னாட்டுப் பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி மற்றும் பெற்றோர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
எஸ்.கே.பி.வனிதா பன்னாட்டுப் பள்ளி மாணவிகள் வரவேற்பு நடனமாடியும், எஸ்.கே.பி.வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் நவராத்திரியை நினைவுபடுத்தும் விதமாக சிவன் - பார்வதி தேவி ஆகியோரைப் போற்றும் விதமாக நடனமாடியும் மகிழ்வித்தார்கள்.
அடுத்ததாக சிறப்பு விருந்தினர் நூலகர் தயாள வெங்கடேசன், படிப்பின் அவசியத்தையும், திருக்குறக்குறளைப் படித்து வாழ்வில் வெற்றி அடைவது குறித்தும், பெற்றோர்களுக்கு மரியாதை செய்வது குறித்தும் மாணவ-மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தயாள வெங்கடேசன் மற்றும் பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி ஆகியோர் பிஞ்சுகளின் கரம் பிடித்து நெல்மணிகளில் 'அ' என்னும் எழுத்தை எழுத வைத்தார்கள். மேலும் விஜய தசமியை முன்னிட்டு மாணவ-மாணவியர்களின் சேர்க்கையும் நடைபெற்றது.
No comments