வேப்பமரத்தின் பால் அம்மன் வேலில் வழிந்த அதிசயம்
திருவண்ணாமலை அருகே வேப்பமரத்தில் வடிந்த பால் அம்மன் வேல் மீது வழிந்ததை பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலையிலிருந்து வெறையூர் செல்லும் ரோட்டில் உள்ளது சு.ஆண்டாப்பட்டு கிராமம். இங்கு காளியம்மன் கோயில் உள்ளது. புலி மீது அமர்ந்த நிலையில் காளியம்மன் சிலையும் உள்ளது. கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் விசேஷ நாட்களில் பொதுமக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். ஆடி மாதம் பொங்கலிட்டு படையிலிடுவார்கள்.
இந்த கோயிலின் அருகில் வேப்பமரம் ஒன்று உள்ளது. சில நாட்களாக இந்த வேப்பமரத்திலிருந்து பால் வடிந்து வருகிறது. வேலுக்கு அபிஷேகம் செய்து போன்று இந்த பால் மரத்தின் கீழ் உள்ள வேலின் மீது பால் வழிவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
பக்தர்கள் வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம் தடவி தீபாராதனை காட்டினர். மேலும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
நவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் சமயத்தில் அம்மன் சிலை பகுதியில் உள்ள வேப்பமரத்திலிருந்து பால் வடிவதை பார்க்க சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் வந்து செல்கின்றனர்.
-பார்த்திபன், செய்தியாளர்.
வீடியோவை காண...
--------------------------------------------------------
No comments