தென்பெண்ணை-பாலாற்றை இணைக்க கோரி பாஜக போராட்டம்

தென்பெண்ணை-பாலாற்றை இணைக்க கோரி பாஜக போராட்டம்

தென்பெண்ணை-பாலாற்றை இணைக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறினார். 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் டி.அறவாழி, தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொ.ஏழுமலை மற்றும் அப்பகுதி மக்கள் கலெக்டர் பா.முருகேஷிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தில் விவசாயிகள் அதிகளவில் விவசாயம் தொழில் செய்வதோடு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. எங்களது கிராமத்து பகுதியில் 6.7 ஹெக்டேர் நிலப்பரப்பில் கருப்பு கல் குவாரி செயல்பட்டு வருகிறது. 

பல ஆண்டுகளாக இங்கு அதிகடியான ஆழம் தோண்டி கருப்பு கல் எடுக்கப்பட்டு விட்ட காரணத்தால் அந்த குவாரி செயல்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 03.09.2023 முதல் குவாரியை துவங்கும் வண்ணம் ஆட்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. குவாரி இயங்கினால் சுமார் 120 முதல் 150 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. 

இதனால் மழை பெய்யும் போது ஏரியில் சிறிய அளவு மட்டுமே நீர் சென்று தேங்கும் நிலை உள்ளது. குவாரியின் நீர்மட்டம் கீழே சென்று விட்டால் அருகிலுள்ள சுமார் 30 முதல் 40 விவசாய கிணறுகள் நீர்வரத்து வற்றி விடுகின்றன. 

தற்சமயம் குவாரிக்கு அருகிலுள்ள ஆழ்குழாயிலிருந்து பெறப்படும் நீர்மூலம் தான் தண்டராம்பட்டு நகரிலுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குவாரிக்கு அருகில் ஏரியும் அதனைச் சுற்றி வனக்காடும் உள்ளன. மேலும் குவாரியை சுற்றியுள்ள 200 எக்கர் நிலங்களுக்கு நீர் ஆதாரமான கிணறுகளின் ஊற்றுகள் குவாரியின் ஆழம் காரணமாகவும் மழைநீர் அனைத்தும் குவாரிக்கு சென்று 500 அடி ஆழத்துக்கு கீழ் தேங்கிவிடுவதால் சுற்றுப்புற விவசாய கிணறுகள் அனைத்திலும் நீரில்லாமல் ஆகிவிடுகிறது. 

தண்டராம்பட்டு நகரத்திற்கும் ரோடு பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தற்போது குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு கிரானைட் கற்களை அளவை மதிப்பிடு செய்ய வேண்டும் குவாரியிலிருந்து எடுக்கப்பட்ட கற்களின் அளவையும் மதிப்பீடு செய்ய வேண்டும். குவாரியை அளந்து குவாரியில் ஆழத்தை தெரியப்படுத்த வேண்டும். 

குவாரி தொடர்வது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதாக கூறப்படும் தொடர்புடைய ஆவணங்கள் வீடியோ பதிவை வழங்க கேட்டுக்கொள்வதோடு குவாரியின் ஆழத்தை குவாரியின் ஆழத்தை அளப்பதற்கு அருகில் ருக்கும் குன்றின் அளவுகோலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த குன்றின் உயரத்தையும் அளந்து பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை செய்து கருப்பு கல் குவாரி செயல்பட கொடுக்கப்பட்ட அனுமதி நிரந்தரமாக ரத்து செய்வதோடு எங்கள் கிராமத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள விவசாய கிணறுகளையும் விவசாய விளைநிலங்களையும் விவசாயிகளையும் கால்நடைகளையும் ஏரிகள் காப்புக்காடு மற்றும் அந்த காட்டை நம்பியுள்ள காட்டு விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை-பாலாற்றை இணைக்க கோரி பாஜக போராட்டம்

பிறகு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சாத்தனூர் அணையிலிருந்து சமுத்திரம் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர ரூ.309.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றிலிருந்து கால்வாய் மூலம் திருவண்ணாமலை சமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். மேலும் தென்பெண்ணை ஆறு - பாலாறு இணைப்பு ஏற்பட்டால் வடபகுதி மாவட்டங்கள் நீர்வளம் பெறும். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும.; நடவடிக்கை எடுக்க தவறினால் திருவண்ணாமலை தலைநகரில் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Next Post Previous Post

No comments