ஆவின் பால் நீலம், பச்சை நிற பாக்கெட்டில் கிடைக்காது

ஆவின் பால் நீலம், பச்சை நிற பாக்கெட்டில் கிடைக்காது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் பால் நீலம், பச்சை நிறத்திற்கு பதில் வேறு கலர்களில் கிடைக்கும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

ஆவின் பால் நீலம், பச்சை நிற பாக்கெட்டில் கிடைக்காது

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) மூலமாக ஆரணி, வந்தவாசி, போளுர், செங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் ஆவின் சமன்படுத்திய பால் (Tonned Milk), நீல நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்திய பால் (Standarize Milk) பச்சை நிற பாக்கெட்டிலும், மற்றும் நிறை கொழுப்பு பால் (Full Cream Milk) ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும் வழங்கப்பட்டு வந்தது. 

ஆவின் பால் நீலம், பச்சை நிற பாக்கெட்டில் கிடைக்காது

தற்போது நிர்வாக காரணங்களுக்காக நிலைப்படுத்திய (பச்சை நிற பாக்கெட்) பாலுக்கு பதிலாக ஆவின் டிலைட் என்ற பெயரில் ஊதா நிற பாக்கெட் (FAT - 3.5%, SNF 8.5% ) தரம் கொண்ட 500மில்லி மற்றும் 200மில்லி பாக்கெட்டிலும், நிறை கொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பாலுக்கு பதிலாக ஆவின் கோல்டு என்ற பெயரில் மஞ்சள் நிற பாக்கெட் (FAT - 5.0%, SNF-9.0%) தரம் கொண்ட 1000மில்லி மற்றும் 500மில்லி பாக்கெட்டிலும்,  விலை மாற்றம் ஏதும் இல்லாமல் அதே விலையில் 16.10.2023 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எனவே, திருவண்ணமலை மாவட்டத்தில் வசிக்கும் முகவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆவின் பாலை வாங்கி பயன் பெற்று, தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

Next Post Previous Post

No comments