அண்ணாமலையார் கோயில் புதிய யானைக்கு பயிற்சி
அண்ணாமலையார் கோயில் புதிய யானைக்கு பயிற்சி
புராதன கோயிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இல்லாமல் இருந்து வருகிறது. 23 வருடங்களாக உற்சவங்களில் பங்கேற்று பக்தர்களிடமும் பொது மக்களிடமும் அன்பாக பழகி வந்த யானை ருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உயிரிழந்தது.
வட ஒத்தைவாடை தெரு கோயில் மதில்சுவர் அருகில் ருக்கு புதைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கு ரூ.49 லட்சத்தில் ருக்குக்கு மணிமண்டபம் கட்டும் வேலையை அரசு தொடர்ந்திருப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு 5 வருடங்களாக யானை இல்லாத நிலையில் ஏறக்குறைய அரைகோடி ரூபாய் செலவு செய்து இறந்து போன யானைக்கு மணிமண்டபம் கட்டுவது தேவையில்லாதது என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திகை தீப திருவிழாக்கள் யானை இல்லாமல் நடைபெற்று வருவது பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
விரிவான செய்தி...
https://www.agnimurasu.com/2023/09/karthikai-deepa-festival-without-an-elephant-this-year-too
No comments