ஜவ்வாதுமலையில் பழங்குடி மக்கள் மாநாடு-பிச்சாண்டி பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் பழங்குடி மக்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் தமிழக ஆதிவாசிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பழங்குடி மக்கள் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேசன், தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, பழங்குடியின சங்கத்தின் துணைத் தலைவர் லீலாவதி, மாநில அமைப்பாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் கஜேந்திரன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,
திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதி சான்றிதழ் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற மாதம் கோடை விழாவில் கலந்து கொண்ட போதுதான் வழங்கப்பட்டது.
தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் மலைவாழ் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் எ.வ.வேலுவும், நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் முழுமையாக செயல்பட்டு வருகிறோம் ஜவ்வாதுமலை சுற்றுலாத்தலமாக திமுக ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. சுற்றுலா மாளிகையும் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டு காலமாக இருந்த எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஜவ்வாதுமலையில் பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. திமுக ஆட்சியில்தான் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தொழிற்பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் செல்வதற்கு கடினமாக உள்ளது என்பதால் ஒரு சில இடங்களில் சாலை வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கேட்டுள்ளனர்.
வனத்துறையிடம் ஒப்புதல் பெற்று புதிய சாலை அமைப்பதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ஜீவா மூர்த்தி, துணை சேர்மன் மகேஸ்வரி செல்வம், ஒன்றிய செயலாளர் கேசவன், பழங்குடியினர் நல மாநில பொதுச் செயலாளர் குணசேகரன், மாநிலத் தலைவர் தங்கராஜ், தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் நடுப்பட்டு கே.ரவி, இயக்குனர் அல்போஸ்ராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
அக்னிமுரசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் ஐகான் ஐ கிளிக் செய்து புதிய வீடியோக்களை பெறுங்கள்.
No comments