போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு - அறிவிப்பு வெளியீடு


இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு,

இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு -2023-க்கு (இந்திய குடியுரிமை உடையவர்கள் மட்டும்) விண்ணப்பதாரர்களிடமிருந்து, இணைய வழி விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஊதிய விகிதம் ரூ.18,200 -67,100.
இத்தேர்வுக்கான முக்கிய தேதிகள்
அறிவிக்கை தேதி - 08.08.2023                    இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி - 18.08.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி தேதி - 17.09.2023      எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள் : 3,359
துறை - காவல்துறை
பதவி - இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட /மாநகர ஆயுதப்படை) - 780 (பெண்கள்)
இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) - 1,819 (ஆண்கள்)
துறை - சிறை மற்றும் சீர்திருத்தத் துறை
பதவி - இரண்டாம் நிலை சிறைக் காவலர் - 83 (ஆண்கள்), 3 (பெண்கள்)
துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
பதவி - தீயணைப்பாளர் - 674 (ஆண்கள்)
சிறப்பு ஒதுக்கீடுகள் :
9 சதவீதம் அந்தந்த துறையிலுள்ள களப்பணியாளர்களின் சார்ந்துள்ள வாரிசுகள் மற்றும் 1 சதவீதம் அந்தந்த துறையிலுள்ள அமைச்சுப் பணியாளர்களின் சார்ந்துள்ள வாரிசுகளுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். காலி பணியிடங்களின் எண்ணிக்கை - 336

அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுப் போட்டிகளில் தேசிய / தமிழ்நாடு சார்பாக மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் சார்பாக பங்கு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். காலி பணியிடங்களின் எண்ணிக்கை - 336

இதே போல் தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 சதவீதமும், ஆதரவற்ற விதவைகளுக்கு 3 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இணையவழி விண்ணப்பம் :
விண்ணப்பதாரர்கள் இவ்வாரியத்தின் இணையதளமான  https://tnusrb.tn.gov.in/மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தகவல் சிற்றேடு :
இத்தேர்விற்கான கூடுதல் தகவல்கள், எழுத்துத் தேர்விற்கான தேர்வு நிலைகள் மற்றும் தேர்வு முறைகள், ஆகியவை தகவல் சிற்றேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இவ்வாரிய இணைய தளமான https://tnusrb.tn.gov.in/ இருந்து தகவல் சிற்றேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு முன்னர், இவ்வாரிய இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேட்டினை படித்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post

No comments