அரசு பதவிகளில் யாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை
அரசு பதவிகளில் யாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரி திருவண்ணாமலையில் நடந்த யாதவ மகாசபை இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள பாண்டுரங்கா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில தலைவர் நா.சே.ஜெ.இராமச்சந்திரன் ஆணைக்கிணங்க தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் மாநில இணை பொதுச் செயலாளர் என்.எஸ்.சேதுமாதவன் தலைமையில் இன்று (6ந் தேதி) காலை நடைபெற்றது.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட தலைவர் எஸ்.பழனி தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.டி.வேலு ஆகியோர் முன்னிலை வகிக்க தெற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் கே.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாநில பொருளாளர் கே.எத்திராஜ் மாநில துணை தலைவர் பி.போஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் எஸ்.துரை மாநில இணை பொதுச் செயலாளர் ராம்தாஸ் மாநில துணைத் தலைவர் பி.ஜவகர் ஏ.எஸ்.பழனி தலைமைநிலைய செயலாளர் எஸ்.செல்வம் மாநில கொள்ளை பரப்பு செயலாளர் என்.முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்சி சிறுகானூரில் செப்டம்பர் 2ந் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் பெருமளவில் யாதவ இளைஞர்கள் பங்கேற்பதென்றும் அரசு உயர்பதவிகளில் இடஒதுக்கீடு மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் உறுப்பினர் தேர்வு போன்ற பதவிகளில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்றும், யாதவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து யாதவ இளைஞரணியினர் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.நாராயணன் நன்றி கூறினார்.
No comments