புளியம்பட்டி ஏகலைவா பள்ளியில் வேலை வாய்ப்பு
தண்டராம்பட்டு வட்டம் புளியம்பட்டி ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு 27 பேரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 7ந் தேதி கடைசி நாளாகும்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு பழங்குடியினர் உண்டி உறைவிட மற்றும் கல்வி நிறுவனச் சங்கத்தின் கீழ் செயல்படும் சேலம் மாவட்டம், அபிநவம் மற்றும் ஏற்காடு கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமைல, நீலகிரி மாவட்டம், மு.பாலாடா, திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டி, திருப்பத்தூர் மாவட்டம், கீழூர், நாமக்கல் மாவட்டம், செங்கரை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், குமிழி ஆகிய 7 மாவட்டங்களில் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி/பட்டதாரி ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்பிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், புளியம்பட்டி, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் பொதுத் தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், ஏகலைவா பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கருதியும் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு பணி நாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய கல்விச் சான்றுடன் கீழ்கண்ட ST பழங்குடியினரிடமிருந்து பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ST பணிநாடுநர்கள் இல்லாத பட்சத்தில் SC பணிநாடுநர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000/-மும், மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000/- காப்பாளர்களுக்கு ரூ.12,000/-வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக புதியதாக நியமிக்கப்படும் பணி என்பதால் இந்த கல்வி ஆண்டு (2023-2024) அல்லது பள்ளியின் கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணியில் தொடர முடியும்.
விருப்பமுள்ள ST பழங்குடியின பணிநாடுநர்களிடமிருந்து 07.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், திருவண்ணாமலை என்ற முகவரியில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments