சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு குவிந்த இளைஞர்கள்
திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத பெண்களும், ஆண்களும் குவிந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வினை திருவண்ணாமலை மாவட்டத்தில் 6401 பேர் எழுதுகிறார்கள். இதில் 1471 பேர் பெண்கள். 1149 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இவர்களுக்காக திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கல்லூரி, எஸ்.ஆர்.ஜே.டி.எஸ் பள்ளி, கரண் கலை அறிவியல் கல்லூரி, கம்பன் கல்லூரி, சிஷ்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என 6 சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 6 சென்டர்களிலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத இன்று காலை முதலே ஆண்களும், பெண்களும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆல் டிக்கெட், பேனாவை தவிர வேறு பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வுக்காக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்தியபிரியா, எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் 615 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 10 மணி முதல் 12-30 மணி வரை பொது அறிவு(ஜென்ரல் நாலேஜ்), அறிவியல், வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட தேர்வுகளும், மதியம் 3 மணிக்கு தொடங்கி 5:30 மணி வரை தகுதி தேர்வான தமிழ் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அக்னிமுரசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் ஐகான் ஐ கிளிக் செய்து புதிய வீடியோக்களை பெறுங்கள்.
https://youtube.com/@AgniMurasu
No comments