சிமெண்ட் கழக முகவராக எஸ்.சி,எஸ்.டியினருக்கு வாய்ப்பு
எஸ்.சி,எஸ்.டியினரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தின் வருவாய் ஈட்டிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தின் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதரகட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இனையதளம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக, வயதுவரப்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments