பக்தர்களுக்கு நாள் முழுக்க அன்னதானம்-ஊராட்சி தலைவர் ஏற்பாடு

பக்தர்களுக்கு நாள் முழுக்க அன்னதானம்-ஊராட்சி தலைவர் ஏற்பாடு

சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு 1 நாள் முழுவதும் ஊராட்சி மன்றத் தலைவரின் ஏற்பாட்டின் படி அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 

பக்தர்களுக்கு நாள் முழுக்க அன்னதானம்-ஊராட்சி தலைவர் ஏற்பாடு

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி நேற்றும், இன்றும் 20 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையை வலம் வந்து அண்ணாமலையார்-உண்ணாமலையம்மனை வழிபட்டனர். வழி நெடுகிலும் பக்தர்களுக்கு ஆசிரமங்கள், ஆன்மீக அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டன. 

ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட துர்வாசர் கோயில் அருகில் அருள்மிகு அண்ணாமலையார்-உண்ணாமலையம்மன் அன்னதான அறக்கட்டளை சார்பில் சித்ரா பவுர்ணமியை யொட்டி 10வது ஆண்டாக மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. 

அன்னதான அறக்கட்டளை குழுவின் தலைவரும், ஆணாய் பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவருமான கே.தர்மராஜ் அன்னதானம் வழங்குதலை துவக்கி வைத்தார். 

காலையில் இட்லி, பொங்கல், வடையும், , பகல் தொடங்கி இரவு வரை சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல் என அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் இந்த அன்னதானத்தால் வயிறார சாப்பிட்டு விட்டு சென்றனர். சுத்தகரிக்கப்பட்ட குடிநீருடன், சுத்தமாக, சுகாதார முறையில் சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்து பக்தர்கள் அன்னதான குழுவினரை பாராட்டினர். 

நிகழ்ச்சியில்  திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஸ்ரீதேவிபழனி அறக்கட்டளையின் செயலாளர் ஏ.எஸ்.கருணாநிதி, கவுரவத் தலைவர்கள்  ஜி.பழனி, எஸ்.பிரசன்னா, ஆர்.தனகோட்டி, ரமணா, ப.கிஷோர்,  துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார், துணை செயலாளர் எம்.கார்த்திகேயன், அன்னதானகுழு உறுப்பினர் அருணாச்சலராமன் மற்றும் அன்னதான குழு நண்பர்கள் கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்க நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

முன்னதாக அண்ணாமலையார், உண்ணாமலையார் படம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

மக்களின் பசிப்பிணியை போக்க காசியில் ஓர் ஆண்டு முழுவதும் செய்யப்படும் அன்னதானத்தை விட திருவண்ணாமலையில் ஒரே ஒரு நாளில் செய்யப்படும் அன்னதானம் அதிக புண்ணியத்தை தரும் என்பதால் 10வது ஆண்டாக அன்னதானம் வழங்கி வருவதாக அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Post Previous Post

No comments