100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு

100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு

100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எஸ்.சி., எஸ்.டி இன விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு அரசின் ' கலைஞர்  அனைத்துக்  கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை    வளர்ச்சி திட்டத்தின்' கீழ் நூறு சதவீத மானியத்தில் 2022-2023ம் நிதி ஆண்டில் ஊரக வளர்ச்சித் துறையி;ன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள தனிப்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கிணறுகள் (ஆழ்துளை அல்லது குழாய் கிணறு) அமைக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட / பழங்குடியின சிறு /குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ஒன்று முதல் 5 ஏக்கர் வரை நிலப்பரப்பு இருக்க வேண்டும். இந்நிலப்பரப்பிற்கு ஏற்கனவே எந்த வித நீர் ஆதாரமும் இருக்க கூடாது. மேற்காணும் நிபந்தனைக்குட்பட்ட விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு (ஆழ்துளை கிணறு) மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு மின் மோட்டார் வழங்கப்படும். மேலும் வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும்.  

செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர், தெள்ளார், சேத்துப்பட்டு, அனக்காவூர், ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் ஆரணி உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகத்திலும், திருவண்ணாமலை, கீழ்ப்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், கலசபாக்கம்,  போளுர், ஜவ்வாதுமலை, செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியில் துறை) அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர்/ உதவி தோட்டக்கலை அலுவலர், உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் மூலமும் விண்ணப்பங்களை ஆன்லைனில் UATT  வழியாகவும் விண்ணப்பிக்கலாம் 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments