பிறக்கும் தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்?

பிறக்கும் தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்?

தமிழ் புத்தாண்டு சோபகிருது வருடம் எப்படி அமையப் போகிறது என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன.

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகில் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரை உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தின் பெயர்களானது, அம்மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே கொண்டுள்ளது.

உதாரணமாக, சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயர் சித்திரை. இதே போன்று, வைகாசி மாத பௌர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையில் தான் பெயர்கள் வழங்கப்படுகின்றன.


பிறக்கும் தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்?


புதுவருட துவக்கம் 

சோபகிருது தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை மாதம் 01ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று துவங்குகின்றது.

இடைக்காடர் சித்தர் இயற்றிய தனது நூலான 'அறுபது வருட வெண்பா' என்ற நூலில் சோபகிருது வருடம் பற்றி உள்ள பாடல் பின் வருமாறு,

சோபகிருது வருட பலன்

சோபகிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்

உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்

உண்டாகு மென்றே யுரை.

சோபகிருது வருடத்தில் மனிதர்கள் வேண்டிய அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வார்கள். மனதில் இருக்கக்கூடிய கோப உணர்வுகள் குறைந்து அவர்கள் இடத்தில் நல்ல குணம் அதிகரிக்கும். மங்கள நிகழ்வுகள் பல நடைபெறும். நன்மைகள் மென்மேலும் பெருகும். மழை பொழிவினால் உலகமெங்கும் செழிப்பு உண்டாகும்.

👉 இந்தியாவில் இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும்.

👉 புதிய கல்வி நிறுவனங்கள் தோன்றும்.

👉 நூல் விலை அதிகரிக்கும்.

👉 கனிகள் மற்றும் ஆபரணங்களின் விலை உயரும்.

👉 கோழிகளின் விலை மற்றும் முட்டை விலை உச்சத்தை அடையும்.

👉 பாரம்பரியமான வைத்திய முறைகள் மக்கள் இடத்தில் பிரபலம் அடையும்.

👉 நெற்பயிர் உற்பத்தியில் சரிவு ஏற்படும்.

👉 அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பல நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

👉 கனிம பொருள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் அதிகமாகும்.

👉 மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

- கு.பண்பரசு

https://www.facebook.com/Panbarasu

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Also read this...


Next Post Previous Post

No comments