உணவு தயாரித்தல் படிப்பில் சேர எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கு வாய்ப்பு

உணவு தயாரித்தல் படிப்பில் சேர எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கு வாய்ப்பு

உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பில் சேர எஸ்.சி.,எஸ்.டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition  நிறுவனமானது ISO 9001 2015  தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந் நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம்  சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 

Amercian Council of Business ஆல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022-ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO  WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

 இப்புகழ் பெற்ற நிறுவனத்தில்  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின இனத்தை  சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftmanship Course in Food Production&Patisserie ) படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

உணவு தயாரித்தல் படிப்பில் சேர எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கு வாய்ப்பு

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக  இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில்  45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு பயில National  Testing Agency மூலம் நடத்தப்படும் National Council For Hotel management Joint Entrance Examination (NCHM JEE)-ல்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில்  தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும். 2023-2024  ஆம் ஆண்டிற்கு  National Testing Agency மூலம் நடத்தப்படும் NCHM JEE   தேர்விற்கு  விண்ணப்பிக்க கடைசி தேதி-27.04.2023 ஆகும்.  

இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/-  முதல் ரூ.35,000/-  வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/-  வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் http://www.tahdco.com/ என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一

Read on

என்னால் முடியாததை யாராலும் செய்ய முடியாது-எ.வ.வேலு

அரசு ஆணையை அலசி பார்க்காத நெகட்டிவ் அதிகாரிகள் - எ.வ.வேலு காட்டம்

Next Post Previous Post

No comments