ஊர்க்காவல் படை துணை தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பெண் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படை 1963-ல் துவக்கப்பட்டது. தற்போது ஊர்காவல் படையினரின் ஒரு நாள் ஊதியம் 152 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி ஆகியவற்றிலும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பெண் துணை வட்டார தளபதி பணி நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பெண் துணை வட்டார தளபதி (Depty Area Commander) பதவிக்கு தேர்வு நடைபெற உள்ளது.
தகுதிகள்:-
1. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. வயது 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4. இப்பதவி ஒரு கவுரவ பதவியாகும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:-
ஊர்க்காவல் படை அலுவலகம், திருவண்ணாமலை (ஆயுதப்படை வளாகம்).
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.02.2023
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments