125வது ஆண்டில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி

125வது ஆண்டில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி


துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்கள் படித்த  திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி 125வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 125வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஹூபர்ட் தனசுந்தரம் தலைமை தாங்கினார். 

ஏஎல்சி தலைவரும் பேராயருமான வெ.சாமுவேல்கென்னடி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, 

டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேலும் பெருமைகளை சேர்க்க வேண்டும், இந்த பள்ளி சிறந்த குடிமக்களை உருவாக்க, கல்வி அறிவு கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்துக்காக  ஆரம்பிக்கப்பட்டது. இன்று பெருமைக்குரிய பள்ளியாக திகழ்கிறது. இப்பள்ளி பொது தேர்வுகளில் 100 சதவிதம் வெற்றி பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த விழாவில் ஏஎல்சி தாளாளர் ஜெ.தெய்வநீதி, பொருளாளர் ஏ.ஜாஷ்வாபீட்டர், துணைத் தலைவர் ஐ.ஜேக்கப், ஏஎல்சி சொத்து அதிகாரி ஜி.ஏசுநேசம் பேரின்பதாஸ், முன்னாள் தாளாளர் ரிச்சர்ட் பாஸ்கரன், கர்மேல் பேராயர் எஸ்.ஸ்டீபன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் சார்பில் ஆசிரியர் தேன்மொழி ஏற்புரை நிகழ்த்தினார்.  


125வது ஆண்டில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி


விழாவை யொட்டி மாணவ- மாணவியர்களின் பரதநாட்டியம் மற்றும் சிங்கப்பெண்ணே பாடலுக்கு இடம் பெற்ற நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற்றிருந்தன. 

பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து கவுரவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.  கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திய மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. 


125வது ஆண்டில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி


விழாவில் கர்மேல் ஆயர் ஏ.சாமுவேல்,  பள்ளியின் பாடகர்குழுவை சேர்ந்த டி.தேன்மலர் ராஜகுமாரி உள்பட ஏஎல்சி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 

முடிவில் பள்ளியின் மேலாளர் டி.பால்கிருபாகரன் நன்றி கூறினார்.

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இப்பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Post Previous Post

No comments